முகப்பொலிவை அதிகரிக்கும் பழங்களின் தோல்கள்!!!
Admin9:35:00 PM
பழங்களில் தோல்கள் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தெந்த பழங்களில் தோல்கள் என்ன மாதிரியான சரும பராமரிப்பிற்கு உதவுகின்றன என்பதை பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தின் தோலில் வளமான அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதில் வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும்.
வாழைப்பழத்தின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புறஊதாக் கதிர்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
மாதுளையின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும்.
எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், சரும பொலிவை அதிகரிக்கும்.
ஆப்பிளின் தோலில் பாலிஃபீனால்கள் ஏராளமாக உள்ளதால், அது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும செல்களைப் புதுப்பிக்கும்.
பப்பாளியின் தோலில் ஆல்பா ஹைட்ராக்ஸி பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வல்லது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கவல்லது.
This article is for general information only and is not medical advice. Please consult a doctor or qualified expert before trying any remedy, treatment or product, especially during pregnancy or if you have a health condition.