Recent Posts
recent

ரன்னிங் பயிற்சியால் கிடைக்கும் பயன்கள் - Benefits of Running!!

உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். உடற்பயிற்சி என்றதுமே அனைவரும் ஜிம்முக்கு தான் படை எடுப்பர். ஆனால் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம்.

அது தான் ரன்னிங் பயிற்சி. அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின் அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது.

மேலும் ஓடுதல் சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலின் எடை குறையவும், ஆரோக்கியமாகவும், அழகிய உடலமைப்புடன் இருக்கவும் உதவுகிறது. இனி ரன்னிங் பயிற்சியால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்க்கலாம்...

• உடலின் அதிகப்படியான எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஓடுதல் என்பது சிறந்த பயிற்சி ஆகும். ஏனெனில் ஓடுதல் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.
• ஓடுதல் பயிற்சியை பழகி, அதை வழக்கமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்படும் மற்றும் எலும்புப்புரை, மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. அது மட்டுமல்லாமல் கால், இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்பின் பரப்பளவும் அதிகரிக்கும்.
• ஜாக்கிங் செய்வதை பழக்கமாக வைத்து கொண்டால் அலர்ஜி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராது. ரன்னிங் பழக்கத்தை வழக்கமாக கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்காது.
• ஓடுதல் உடலை ஆசுவாசபடுத்தும் பயிற்சி ஆகும். அதிலும் உடலின் சுகாதாரத்தை அதிகப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பயிற்சி ஆகும்.
• ஓடுதல், செரிமானத்தை அதிகப்படுத்தி பசி ஏற்படவும் தூண்டுகிறது. ஓடுதல் பயிற்சியானது கலோரிகளை எரிப்பதால், ஓடி முடித்தவுடன் அதிக பசி ஏற்படும். ஆகவே ஓடும் முன்பு ஆரோக்கியமான சிற்றுண்டி எடுத்து கொள்ளுதல் அவசியம்.
• ஓடுதல் பயிற்சி கொழுப்பை உருவாக்கும் செல்களை சிதைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவுகிறது. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
• தொடர்ந்து ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், டைப்-2 நீரிழிவு நோய் ஆபத்தை தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.