கடுக்காயில் ஆறு சுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன.
வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது.
மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும்.
பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள்.
கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன் படுத்திகிறார்கள். இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.
கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

கடுக்காயின் மருத்துவப் பயன்கள்!!!
Reviewed by Admin
on
10:53:00 PM
Rating: 5
கருத்துகள் இல்லை: