கண் பாதுகாப்பு!!
கண்கள் மிகவும் மென்மையானவை. கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். தொடர்ந்து தொலைக்காட்சி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும். கண்களில் வலி இருக்கும். இமைகள் கனமாக இருக்கும். தலைவலியும் வரும்.
மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும். இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும்.
கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.
அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும்.
மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம். இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.
வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.
எனவே கண்ணில் சிறிய பிரச்னை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமருத்துவம் செய்வது தவறாகும். இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணணி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும்.
இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கண் மருத்துவ நிபுணர்கள்.
கண்களை கொஞ்சம் கவனியுங்கள்...
பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் என சொல்வது வழக்கம். கண் பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. ஏனென்றால், உள்ளத்து உணர்ச்சிகளைப் அப்படியே கண்ணாடி போன்று பிரதிப்பலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்னைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்னைகளையும், அவற்றிற்கான தீர்வுகளும்...
சுருக்கங்கள் மற்றும் கோடுகள்: கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மென்மையாக இருக்கும். சீக்கிரமே வறண்டு போய்விடும். 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டலாம். கண்களைச் சுற்றி ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்யலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களை கசக்கக்கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக்கிவிடும். சுருக்கம் அதிகம் இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் பயன்படுத்தலாம். மோதிர விரலால் மிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம். தேயிலை கொதித்து வைத்த தண்ணீரை வடிகட்டி அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுத்தல் சுருக்கங்கள், கோடுகள் மறையும். இதை போன்று தினமும் செய்யவும்.
கருவளையம்: சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ் கண்கள் சுற்றியுள்ள பகுதியில் மிக குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்கள் உருவாக காரணம். துவக்கத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரி செய்யலாம். முதலில் 8 மணி நேரம் தூக்கம் தேவை. பகல் நேரத்தில் உள்ளங்கை குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறந்தால் அது ஒருவித மசாஜ்.
கண்களை இறுக மூடவும், பிறகு அகலமாகத் திறக்கவும். இதைப்போன்று 5 முறை செய்யவும். புருவங்களை குறுக்காமல், கண் இமைகளை மட்டும் மூடி, மூடி திறக்கவும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். இந்த பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான பயிற்சி. கருவளையத்தை போக்க இதை தொடர்ந்து செய்யலாம். கருவளையம் அதிகமாக இருந்தால் பியூட்டி பார்லர்களில் ஐ மசாஜ் செய்தால் பலனளிக்கும்.

கண்களுக்கான மேக்கப் நீக்க வேண்டிய அவசியம்: இரவு படுக்கும் முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றவேண்டும். செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்றவேண்டும். தற்போது, ஐ மேக்கர் ரிமூவரும் கிடைக்கிறது. பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கி துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் மேக்கப் முழுக்க அகற்றப்படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.
சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள்: கண்களுக்கு உபயோக்கின்ற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண்களின் மேல் வைக்கக்கூடாது. எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களை கழுவி விட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
கண்களை பராமரிக்க டில டிப்ஸ்: சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களை கழுவவும். சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பச்சை, நீல நிறங்களை சிறிது நேரம் பார்க்கலாம். தினமும் 8 மணி நேர தூக்கம் மற்றும் 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்லது. பின்னர், கண்கள் வசீகரமாக தோற்றமளிக்கும்.

கருத்துகள் இல்லை: