Friday, April 25 2025

கண்களைப் பாதுகாக்க...

பெண்களுக்கு கண்ணழகே தனி அழகுதான். இந்த அழகைப் பெற இரு கைகளையும் கண்களின்மீது மூடி சிறிதுகூட வெளிச்சம் தெரியாமல் இருட்டாக இருக்கும்படி செய்து, அந்த இருட்டிலேயே கண்களை மட்டும் மேலும் கீழும், பக்கவாட்டிலும் பயிற்சியளிப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்குவதோடு அழகும் பெறும்.
கண்கள் பிரகாசமாக இருக்க, நந்தியாவட்டை பூவைப் பறித்து வந்து சுத்தம் பார்த்து, வெள்ளைத் துணியில் சுற்றி கண்களில் மேல் வைத்துக் கட்டி வந்தால் போதும். மேலும் ஒரு வழியில் செய்யலாம். பறித்து வந்த பூவை தண்ணீரில் நன்கு கழுவி, கண்களின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சி பெறுவதோடு அழகும் கூடும்.
படபடப்பாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து போகும். அப்படி படபடப்பாக உணரும்போது, வசதியாக அமர்ந்து இரு கண்களையும் மூடிக்கொண்டு, இடக்கண் இமைமீது இடக்கை விரலையும், வலக்கண் இமைமீது வலக்கை விரலையும் வைத்து, மென்மையாக நீவி விடுங்கள். ஓரிரு நிமிடங்கள் நீவிய பிறகு, கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். உடனடியாக ரிசல்ட் தெரியும்.
கண்கள் அழகாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டுமானால், பண்ணைக் கீரை, சிறுகீரையை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை புளி சேர்க்காமல் சமைத்தும் சாப்பிடலாம். முழு நிலவன்று இரவு நிலவைப் பார்ப்பது நல்லது.
வாய் நிறையத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு, கண்களை நன்கு திறந்து சுத்தமான தண்ணீரை கண்களில் தெளித்துக் கொண்டாலும், கண்கள் அழகாகும்.
தினமும் படுக்கும் முன்பாக திரிபலா சூர்ணம் 5 கிராம் அளவில் எடுத்து ஒன்றரை ஸ்பூன் த்ரைபல கிருதம் என்னும் நெய்யை லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை ஸ்பூன் தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண் குளிர்ச்சியாகும். கண் நோய் எதுவும் வராமல் பாதுகாக்கலாம்.
உருளைக்கிழங்கு ஒன்றை சரி பாதியாக வெட்டி, வெட்டப்பட்ட பகுதியை கண்களைச் சுற்றியும், கைகள், கழுத்து ஆகிய பகுதிகளிலும் மெதுவாகத் தேயுங்கள். உங்களுடைய கண்கள் மீதும், உள்ளங்கால்களின் மீதும்கூட அதைத் தேய்க்கலாம். இப்படிச் செய்தால், கண் கருவளையங்களும், தோலின் மீதுள்ள மருக்களும் மறையும்.
கரு வளையமும், கண் சோர்வும் அகல சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றித் தடவிக்கொண்டு படுங்கள். காலையில் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவ்வாறு பத்து நாள்கள் செய்து வந்தாலே போதும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.