Recent Posts
recent

சரும சுருக்கத்தை குறைக்க உதவும் ஒளி சிகிச்சை

 தூக்கமின்மை முதல் சரும சுருக்கங்கள் வரை பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளை குணப்படுத்துவதற்கு ‘ஒளி தெரபி’ எனப்படும் சிகிச்சை முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

தூக்கமின்மை முதல் சரும சுருக்கங்கள் வரை பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளை குணப்படுத்துவதற்கு பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றன. ‘ஒளி தெரபி’ எனப்படும் சிகிச்சை முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. வெள்ளை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்கள் ஒளி சிகிச்சை யில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மன நிலையை மேம்படுத்த வெள்ளை ஒளி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ஒளி கதிர்களை வெளியிடும் விளக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கின் அருகில் காலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பது மனநிலையை மேம்படுத்தும். வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை நிலையாக வைத்திருக்கவும் உதவும். குளிர்காலத்தில் ஐந்தில் ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அப்போது இந்த ஒளியின் பிரகாசத்தில் அமர்ந்திருப்பது அரு மருந் தாக அமையும் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.

நீல ஒளி சிகிச்சை தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. நீல நிற வெளிச்சத்தை உமிழும் பல்புகளில் பகல் பொழுதில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும்போது இரவில் நல்ல தூக்கம் வரும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதுதொடர்பாக தீவிர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிவப்பு ஒளி சிகிச்சை சரும சுருக்கத்தை குறைக்க உதவும் என்பது 2013-ம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு ஒளி தோல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. கொலோஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. சருமத்தின் அமைப்பை மேம்படுத்த வும் துணைபுரிகிறது. இத்தகைய ஒளி சிகிச்சையை டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்வது பலன் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.