Latest

தொடை பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள்

Admin10:20:00 PM
தொடை பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள் || Exercises to reduce fat thigh area

ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். சில எளிய பயிற்சிகள் மூலம் கொழுப்பு சேர்வதை தடுத்துவிடலாம்.

தொடை பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்கும் வழிகள்சிலருக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிந்து காணப்படும். பொதுவாக நேராக நிமிர்ந்து நிற்கும்போது இடுப்பு பகுதியில் இருந்து மூட்டு பகுதி வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தொடைப் பகுதியில் தசைகள் குவிந்திருந்தால் அங்கு கொழுப்பு சேர்ந்திருப்பதாக அர்த்தம். அவை ‘சாடில் பேக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. ஆனால் சாத்தியமற்றது அல்ல. சில எளிய பயிற்சிகள் மூலம் கொழுப்பு சேர்வதை தடுத்துவிடலாம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். 


exercise


ஒருசில எளிய பயிற்சிகள் மூலம் தொடைப்பகுதியில் சேரும் கொழுப்பை குறைத்துவிடலாம்.

ஒற்றை கால் பயிற்சி: யோகா விரிப்பில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இரு கால்களையும் மடக்கிய நிலையில் தரையில் ஊன்றிக்கொள்ள வேண்டும். பின்பு இடது கால் பகுதியை மட்டும் மேல் நோக்கி உயர்த்தி 5-7 வினாடிகள் நேராக வைத்திருந்து பின்பு கீழே தாழ்த்தி இயல்பு நிலைக்கு வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். பின்பு இடது காலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வலது காலை மேலே உயர்த்தி பயிற்சியை தொடர வேண்டும். இவ்வாறு தினமும் 10 முதல் 15 முறை பயிற்சி செய்து வரலாம்.

சாய்ந்த நிலை பயிற்சி: தரை விரிப்பில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு மேல் பகுதியில் இருக்கும் காலை நன்றாக உயரே உயர்த்தி சில விநாடிகள் வைத்திருந்து கீழே இறக்கி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம்.

இந்த பயிற்சியின் மூலம் தொடை பகுதியில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். கொழுப்பு சேர்ந்திருந்தாலும் கரையத் தொடங்கும்.

இடுப்பு பயிற்சி: தரை விரிப்பில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்பு முழங்கையை தரையில் அழுத்தமாக ஊன்றிவிட்டு இடுப்பையும், ஒரு காலையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். அப்போது கால் பகுதி நேரான நிலையில் இருக்க வேண்டும். சில விநாடி கள் அதே நிலையில் வைத்துவிட்டு இடுப்பை கீழே இறக்கி தரையில் பதியவைத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு தினமும் 15 முறை பயிற்சி செய்து வரலாம்.

This article is for general information only and is not medical advice. Please consult a doctor or qualified expert before trying any remedy, treatment or product, especially during pregnancy or if you have a health condition.