Latest

குளிர்காலத்தில் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போக!

Admin10:03:00 PM

வழக்கத்தை விட குளிர்காலத்தில் கண்களுக்கு கீழ் அதிகமாக கருவளையம் ஏற்படலாம். இதனால் வெளியில் செல்வதற்கு கூட அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த கருவளையத்தை போக்குவதற்கு என்று சில வழிகள் உள்ளன. குளிர்காலத்தில் இந்த நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும் கருவளையம் இருந்தால் அதை சரி செய்யவும் முடியும், கருவளையம் வராமல் தடுக்கவும் முடியும். இது குறித்து தான் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

Dark Circle Home Remedy

பெரும்பாலும் பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் கருவளையம் ஒன்று என கூறலாம். அதிக நேரம் கணினியில் நேரடித்தை செலவிடுதல், டிவி பார்த்தல், மொபைல் போன் பயன்படுத்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருத்தல் போன்ற பல காரணிகள் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன. குளிர்காலத்தில் கருவளையம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இயற்கையான முறையில் கருவளையத்தை சரி செய்வதற்கு பல வழிகள் உள்ளன. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். இந்த கட்டுரையில் குளிர்காலத்தில் கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையத்தை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுட வயது காரணம்

பெரும்பாலும் வயது முதிர்வு காரணமாக கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. நம் கண்களுக்கு கீழ் உள்ள பகுதிகள் எண்ணற்ற ரத்த நாளங்களை கொண்டுள்ளன. இவற்றில் பாதிப்பு ஏற்படும் போது கண்களுக்கு கீழே கருவளையம் தோன்றுகிறது. மேலும் வயதாகும் போது நமது தோல் மெலிந்து காணப்படுகிறது. இதனால் ரத்தநாளங்கள் மிகவும் தெளிவாக வெளிப்படுகின்றன. இவைதான் நமக்கு கருவளையங்கள் போல காட்சியளிக்கின்றன. இவை எல்லா பருவத்திலும் இருக்கும் என்றாலும் குளிர் காலங்களில் இவை இன்னும் அதிகரிக்கலாம்.

கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட குறைவான தூக்கம்

தூக்கமின்மை என்பது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதிக்க கூடியது. தினசரி நமது உடலுக்கு தேவையான ஓய்வினை கொடுக்க வேண்டியது மிக அவசியம். இரவில் சரியாக தூங்காத போது நமது கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது. தூக்கமின்மையின்மை காரணமாக கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்பட்டு கருவளையங்கள் ஏற்படுகின்றன. சருமத்திற்கு அதன் வேலைகளை செய்வதற்கான நேரத்தை நாம் ஒதுக்குவதில்லை. நாம் ஓய்வெடுக்கும் போது தான் சருமம் அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்யும். இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது கருவளையம் ஏற்பட காரணமாக இருக்கலாம்.

sleeping

கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட சூரிய ஒளியில் வெளிப்படுதல்

அதிக நேரம் சூரிய ஒளியில் வெளிப்படும் போது நமது சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் கண்களும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதன் காரணமாக மெலனின் என்ற நிறமியின் உற்பத்தி தூண்டப்பட்டு கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது. எனவே நீங்கள் சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்றால் அதற்கு தகுந்த மாதிரியான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. கண்களுக்கு கீழே கருவளையத்தை சரி செய்யக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போக ரோஸ் வாட்டர்

சரும பராமரிப்பு பொருட்களில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய இந்த ரோஸ் வாட்டரை கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையங்களை சரி செய்யவும் பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கை டோனராக பயன்படுகிறது. இது நமது கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை சரி செய்து கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. கண்களில் இருக்கும் சுருக்கங்களை சரி செய்யவும் உதவுகிறது.

கண்களுக்கு கீழ் கருவளையம் போக பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயின் நன்மைகள் காரணமாக சரும பராமரிப்பு பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய இந்த பாதாம் எண்ணெய் நமது கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் சரி செய்ய உதவுகிறது. பாதாம் எண்ணையுடன் வைட்டமின் ஈ சேர்ந்து கலந்து கருவளையம் உள்ள பகுதியில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வர கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் விரைவில் மறையும்.

badam oil



கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போக தக்காளி

தக்காளியில் உள்ள பண்புகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றை எடுத்து அதை கருவளையம் உள்ள பகுதியில் தடவி மசாஜ் செய்யவும். தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் கருவளையத்தை வெகு விரைவில் சரி செய்ய உதவுகின்றன. தக்காளி சாற்றினை கருவளையம் உள்ள இடங்களில் தடவி குறைந்தது பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைந்து கண்கள் பொலிவு பெறும்.

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போக வெள்ளரிக்காய்

நமது சருமத்திற்கு ஈரப்பதத்தை தரக்கூடிய மிகச்சிறந்த உண்ணக்கூடிய பொருட்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் நேரடியாகவும் சருமத்தில் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டி கண்களின் மேலே வைத்து சிறிது நேரம் மூடிக்கொள்ளவும். கருவளையத்தை சரி செய்வதற்கு இவை உதவுகின்றன. இது கண்களுக்கு குளிர்ச்சியையும் ஓய்வையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. குளிர்காலம் என்பதால் குளிர்ந்த வெள்ளரிக்காயை சருமத்தில் பயன்படுத்துவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இது கருவளையம் போக செய்யும்.

cucumber



கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போக உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள பண்புகள் கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை சரி செய்ய உதவுகின்றன. உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான பிளீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதனை நேரடியாக கருவளையங்கள் ஏற்பட்ட பகுதியில் பயன்படுத்தும் போது சிறந்த தீர்வினை பெற முடியும். மேலும் இது கண்களுக்கு கீழே ஏற்படும் வீக்கத்தை சரி செய்யவும் உதவுகிறது. உருளைக்கிழங்கில் இருந்து சாறு எடுத்து அந்த சாரினை ஒரு பஞ்சில் நனைத்து கருவளையம் உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற விட்டு பின்னர் சுத்தம் செய்து கொள்ளவும்.

This article is for general information only and is not medical advice. Please consult a doctor or qualified expert before trying any remedy, treatment or product, especially during pregnancy or if you have a health condition.