Latest

சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல்

Admin6:49:00 PM
கேழ்வரகு தோசை, கம்பு தோசை போன்ற தோசை வகைகளுக்கு இந்தச் சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் அற்புதமாக இருக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.

சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல்

தேவையான பொருட்கள்:     

சின்ன வெங்காயம் - 50 கிராம்,  

கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 12,  
கல் உப்பு - தேவையான அளவு.

சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல்

செய்முறை:  

புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.

பின்னர் அதில் உறித்த சின்ன வெங்காயம்,  புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும்.

மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.

சத்தான சுவையான சின்ன வெங்காய கொத்தமல்லி துவையல் ரெடி.

This article is for general information only and is not medical advice. Please consult a doctor or qualified expert before trying any remedy, treatment or product, especially during pregnancy or if you have a health condition.