Recent Posts
recent

மன நிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் தர்மசக்கரம் முத்திரை

மன நிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் தர்மசக்கரம் முத்திரை || Dharmachakra Mudra

தர்ம சக்கரம் முத்திரை பயிற்சி நமது உள்ளமும் உடலும் நல்ல சக்தியுடன் இயங்குவதற்கு உதவுகின்றது. இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

Dharmachakra Mudra

செய்முறை

நாம் இந்த முத்திரை பயிற்சியின்போது நமது இரு கை விரல்களையும் இருதயத்திற்கு நேராக வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நமது வலது கை இடது கைக்கு சிறிது மேலாக இருக்கவேண்டும். இரு கைகளிலும் பெருவிரல் நுனியையும் ஆள்காட்டி விரல் நுனியையும் ஒன்று சேர்த்துக்கொள்ளவேண்டும். இது ஒரு வட்டமாக காட்ச்சியளிக்கும். நமது இடது உள்ளங்கை நமது இருதயத்தை நோக்கி பார்க்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். வலது கையின் பின்புறம் இருதயத்தை நோக்கி இருக்கவேண்டும். நமது இடது கையின் நடுவிரலை வலது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியுடன் தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிய நிலையில் தளர்வாக இருக்கவேண்டும்.

இந்த முத்திரை பயிற்சியின்போது நாம் நல்ல மூச்சுப்பயிற்சியில் அதாவது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்கவேண்டும். இந்த மூன்று விரல் நுனியும் தொட்டுக்கொள்வதை பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் எந்த இடத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை நின்றநிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 2-3 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.

பயன்கள்

•    இந்த முத்திரை பயிற்சி நமது உடலுக்கும் மனதிற்கும் நல்ல சக்தியை தரும்.

•    மனக்குழப்பம், மனசஞ்சலம் நீங்கி மன அமைதி கிடைக்கும்.

•    நல்ல சிந்தனைகள் உருவாகும்.

•    மனதில் தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உருவாகும்.

•    வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ஏற்படும்.

•    மன ஒருமைப்பாடு உண்டாகும்.

•    நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பு பாசம் அதிகரிக்கும்.

•    நமது செயல்பாடுகள் நம்பிக்கையுடன் இருக்கும்.

•    நமக்கு ஒரு பேரின்ப நிலை உண்டாகும்.

•    மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கும்.

•    மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

•    உடலுக்கும் உள்ளத்திற்கும் அண்டவெளியில் இருக்கும் நல்ல சக்தி அதிகமாக கிடைக்கும்.

தர்ம சக்கர முத்திரையை தொடர்ந்து செய்துவந்தால் நமது செயல்பாடுகள் மற்றும் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவது உறுதி.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.