Thursday, April 17 2025

சுறுசுறுப்பு வேணுமா மூளைக்கு ???

கற்றல் என்பது மூளை சம்பந்தப்பட்ட வேலை. படிக்கும் காலத்தில் மூளையை சுறுசுறுன்னு வைத்து கொண்டிருந்தால், உங்களை எந்த காலத்திலும் யாராலும் ஜெயிக்க முடியாது. எந்த விஷயமும் மறக்காது. நிறைய சுவையான விஷயங்கள் பேசுவதால், ஏராளமான நண்பர்கள் கிடைப்பர். உங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது என்னும் வகையில் பெயர் வாங்குவீர்கள். மூளை சுறுசுறுன்னு இருந்தா ஏராளமான அறிவு செல்வங்களை அது கொண்டு வந்து சேர்க்கும்.

மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு இதோ சில வழிகள்:

வழி1: தினமும் மூளைக்கு வேலை கொடுங்கள். புதிர், கணக்கு, குறுக்கெழுத்து, போன்ற எளிய விளையாட்டுகளை விளையாடுங்கள்.

வழி2: தினமும் படிங்க. படிக்கிறது நிறைய புதுத் தகவல்களை தரும்.

வழி3: மூளையின் வலது அரைக்கோளப் பகுதியைப் பலப்படுத்துகிற சமாசாரம் இசையில் இருக்கு. நல்ல இசையை கேட்பது உணர்வு பூர்வமான அறிவாளியாக உங்களை உருமாற்றும்.

வழி4: தினமும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு தனியே அமர்ந்து உள்ளுக்குள் ஆழமா மூச்சை இழுத்து விடுங்க. மூளைக்கு உடனடியாக ஆக்சிஜன் பாய்ஞ்சு சடார்னு அது முழிச்சுக்கும். உங்க உடம்பு விழிப்புணர்வோட உஷாரா செயல்பட ஆரம்பிக்கும்.

வழி5: நல்ல சுகமா தூங்குங்க. தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது. எட்டு மணி நேரம் போதும். "கும்பகர்ண பட்டம்' வேண்டாம் சரியா!

வழி6: நிறைய காற்கறிகளை சாப்பிடுங்க. முடிஞ்சா பச்சையாக சாப்பிடுங்க.

டிவி நிறைய பார்க்கிறீர்களா ? 

"டிவி' நிறைய பார்த்தால் கணக்கிலே நிறைய மார்க் உதைக்கும். "சிறுவயது முதல் "டிவி' பார்க்கும் மாணவர்கள், கணக்கில் மந்தமாகி விடுகின்றனர். அவர்கள் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது' என கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டின் மான்ட்ரியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கடந்த 97 மற்றும் 98ல் பிறந்த 1,314 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு நடத்தினர். இரண்டாவது வயது முதல், "டிவி' பார்க்கும் குழந்தைகளின் திறனை, அவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களை கொண்டு கண்காணித்தனர். "தினமும் அதிகமாக, "டிவி' பார்க்கும் குழந்தைகள் கணக்கு பாடத்தில் மந்தமாக உள்ளனர். வகுப்பில் அவர்கள் பாடங்களை கூர்ந்து நோக்குவதில்லை. ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை அவர்கள் சீக்கிரமாக புரிந்து கொள்வதில்லை,' என பள்ளியின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. "டிவி' நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கப் பார்க்க, அவர்களது நுண்ணிய கூர்மை திறனும் குறைந்து வருகிறது. நொறுக்கு தீனி சாப்பிடும் வழக்கம் அதிகரித்து, உடல் எடையும் கூடி விடுகிறது. இதனால், இந்த குழந்தைகள் பத்து வயதில் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகள் அதிக நேரம், "டிவி' பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். அவர்கள் வீட்டுப்பாடங்களை செய்ய அறிவுறுத்துங்கள் என பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் லிண்டா பகனி, தன் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார். "டிவி' பார்க்க எந்த அறிவும் தேவையில்லை; எந்த ஞாபகசக்தியும் தேவையில்லை; எந்த கண்டறியும் திறனும் தேவையில்லை. படுத்து கொண்டே, சாப்பிட்டு கொண்டே பார்க்கலாம். "டிவி' பார்ப்பது, தூங்குவது இவைகள் படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும். மிக எளிதான பழங்கங்களான இவை, நம் எதிர்காலத்தை மிக கடினமாக்கிவிடும்,

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.