வாயு கோளாறை சரி செய்யும் பெருங்காயம்!!!
உணவுக்குப் பயன்படுத்தும் பெருங்காயம், ஆரோக்கியத்தை நிலைநிறுத்த கூடியது. ஆயுளை வளர்க்கும் தன்மை கொண்ட இது, ஜீரண கோளாறுகளை சரிசெய்யும். வாயுவை அகற்றுவதுடன், வயிற்று கடுப்பை போக்கும். சளி, இருமல், ஆஸ்துமா ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்குகிறது. மாதவிலக்கை தூண்டக் கூடியதாகிறது.
பெருங்காயத்தை பயன்படுத்தி பல்வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பெருங்காயம், மிளகு, லவங்கம், உப்பு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி, சிறிது மிளகுப்பொடி, 3 லவங்கம், உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக எடுத்துக் கொள்ளும்போது பல்வலி சரியாகும். ஒற்றை தலைவலி குணமாகும். இருமல், சளியை இல்லாமல் செய்யும். வாயு பிரச்னையை போக்கும். சிறுநீரை பெருக்கும். உள் உறுப்புகளை தூண்டும். பல்வலி இருக்கும்போது பெருங்காயப்பொடி, லவங்க தைலம் சேர்த்து மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
உணவுக்கும் மணத்துக்கும் பயன்படும் பெருங்காயம் என்பது மரத்தின் பிசின். இது வீரியம் மிக்கது.
பெருங்காயத்தை பயன்படுத்தி வாயு கோளாறு, வயிறு உப்புசத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பெருங்காயம், சோம்பு, சீரகம், உப்பு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு, அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று உப்புசம், பொருமல், வாயு பிரச்னை சரியாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
பெருங்காயத்தை பச்சையாக பயன்படுத்துவதால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பெருங்காயத்தை பொறித்து பொடி செய்து பயன்படுத்துவது நல்லது.
பெருங்காயத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், மார்பு சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
செய்முறை:சிறிது பெருங்காயப் பொடி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நீர்விட்டு நன்றாக கலந்து குழந்தையின் மார்பின் மீது பூசுவதால், இடைவிடாத இருமல், மார்பு சளி பிரச்னைகள் சரியாகும். சளி கரைந்து வெளியேறும். வீக்கம், வலியை குறைக்கிறது.

கருத்துகள் இல்லை: