Sunday, April 27 2025

முகத்தில் தேவையற்ற முடிகளை வீட்டிலேயே நீக்கும் எளிய முறைகள்!!!

பெண்கள் தங்கள் தேவையற்ற முடியை நீக்குவதற்கு சலூன் சென்று வேக்சிங் செய்ய வேண்டியிருக்கிறது. உடம்பில் வளரும் பூனை முடியால் அவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இப்பொழுது எல்லாம் குட்டையான பேஷன் உடைகளை வெளியில் போட்டு செல்வது அதிகரித்து வருகிறது. எனவே இந்த காலத்தில் எல்லா பெண்களும் இந்த தேவையற்ற முடியை நீக்கி மேனியை பட்டு போன்று வைக்க ஆசைப்படுகின்றனர்.

இந்த முடியை நீக்க நிறைய முறைகள் உள்ளன. இங்கே இதற்கு நிறைய இயற்கையான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கான சிறந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். உடம்பில் வளரும் பூனை முடியை விட உதட்டின் மேற்பகுதியில் இருக்கும் தேவையற்ற முடிகள் உங்களது தன்னம்பிக்கையை குறைத்து மற்றவர்கள் முன்னிலையில் வெட்கப்பட வைத்துவிடும். எனவே இங்கே உள்ள முறைகளை பயன்படுத்தி சலூன் போகாமலே நல்ல பலனை காணுங்கள்.

1. முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் 

தேவையான பொருட்கள் : 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள், 1 முட்டையின் வெள்ளை கரு 

செய்முறை : 
1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து உதட்டின் மேற்பகுதியில் தடவ வேண்டும். 
2. சில மணி நேரங்கள் கழித்து இந்த மாஸ்க்கை உரித்து எடுத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 
3. வாரத்திற்கு 4 முறை இதை செய்தால் தேவையற்ற முடியை முற்றிலுமாக நீக்கிடலாம்.

2. தயிர், கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் 

தேவையான பொருட்கள் : 2 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் கடலைமாவு 

செய்முறை : 
1. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். 
2. இந்த பேஸ்ட்டை உதட்டின் மேற்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் உலர விடுங்கள். 
3. பிறகு அதை நன்றாக தேய்த்து அப்புறம் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

3. மக்காச் சோள மாவு மற்றும் பால் 

தேவையான பொருட்கள் : 1/2 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவு, 1 கப் பால் 

செய்முறை : 
1. ஒரு பெளலில் இந்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். 
2. இதை உதட்டின் மேற்பகுதியில் தடவி உலர வைக்க வேண்டும். 
3. அதை 20 நிமிடங்கள் கழித்து உரித்து எடுக்கவும். 
4. வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடியின் வளர்ச்சி குறைந்திருப்பதை காணலாம்.

4. உருளைக்கிழங்கு ஜூஸ்
இந்த ஜூஸ் உங்கள் சருமத்துவாரங்களை திறந்து சுலபமாக தேவையற்ற முடியை நீக்கிடும். மேலும் இது ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஆக செயல்படும். 

தேவையான பொருட்கள் : 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பருப்பு (துவரம் பருப்பு, கடலை பருப்பு), 1 உருளைக்கிழங்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன் 

செய்முறை : 
1. பருப்பை இரவே ஊற வைக்கவும். 
2. தோலை நீக்கி உருளைக்கிழங்கை ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. ஊற வைத்த பருப்புடன், லெமன் ஜூஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஜூஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
4. தேன் கலந்து இந்த பேஸ்ட்டை உதட்டின் மேற்பகுதியில் தடவி 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். 
5. பிறகு நன்றாக தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை அடிக்கடி செய்தால் நல்ல பலனை காணலாம்.

5. தேன் மற்றும் எலுமிச்சை ஜூஸ்
இந்த முறையில் தேன் மைல்டு வேக்சிங் ஆக செயல்படுகிறது. எலுமிச்சை ஜூஸ் உங்களது சருமத்தை பொலிவாக்கி சின்ன முடிகளை காணாமல் செய்கிறது. 

தேவையான பொருட்கள் : 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் 

செய்முறை : 
1. இந்த இரண்டையும் கலந்து உதட்டின் மேற்பகுதியில் தடவ வேண்டும். 2. 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். 
3. பிறகு மென்மையான காட்டன் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அந்த பகுதியில் துடைத்து எடுங்கள். 
4. பிறகு தண்ணீரில் கழுவவும். 
5. வாரத்திற்கு 3-4 முறை செய்தால் முடியின் வளர்ச்சி குறைந்து விடும். 

இந்த இயற்கையான முறைகள் மிகவும் பாதுகாப்பானது. இதை பயன்படுத்தி உங்கள் தேவையற்ற முடியை நீக்கி மற்றவர்கள் முன்னிலையில் அழகாக பிரதிபலியுங்கள்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.