Recent Posts
recent

சில பழக்கங்கள்... நன்மைகளும், தீமைகளும்!!!

சில பழக்கங்கள் நம்மோடு தொடர்ந்து வரும். அவற்றின் நன்மை, தீமை தெரியாமலே இயல்பாகவே அவற்றைச் செய்து வருவோம். அப்படிப்பட்ட சில பழக்கங்கள் பற்றியும், அவற்றால் ஏற்படும் நன்மை, தீமை பற்றியும் பார்ப்போம்...

பகல் நேர உறக்கம்: சில நேரங்களில், களைப்பின் காரணமாக பகல் வேளையிலேயே ஒரு குட்டித் தூக்கம் போட நேரலாம். இது கெட்ட பழக்கமாகக் கருதப்பட்டாலும், இதனால் நன்மைகளும் இருக்கின்றன. உடம்பில் உடனடியாக சோர்வு நீங்கி தெம்பு கிடைக்கும். மனம் தெளிவடையும்.

காபி: பலருக்கும் சூடாக ஒரு கப் காபி பருகுவது மிகவும் பிடித்த பழக்கம். அடிக்கடி காபி அருந்துவது நிச்சயம் கெடுதல்தான். ஆனால் அளவோடு காபி பருகுவது, நீரிழிவு, அல்சைமர், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பயம், பதற்றம்: பயம், பதற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகள் மனதின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆனால் இந்த உணர்வுகள் ஓர் உடனடி வலிநிவாரணியாகச் செயல்படுவதாக டாக்டர் ரிச்சர்ட் ஸ்டீபன்ஸ் கூறுகிறார்.

பகல் கனவு: ‘நமக்கு அப்படி நடந்தால் எப்படி இருக்கும்.... இப்படி நடந்தால் எப்படி இருக்கும்’ என்று இன்பமான பகல் கனவில் மூழ்குவது சிலரின் வழக்கம். இது தற்காலத்தை மறந்து, கற்பனையில் காலத்தைப் போக்கும் வீணான செயல் என்று கூறப்படலாம். ஆனால், பகல் கனவால் கற்பனைத் திறன் அதிகரிப்பதாகவும், மூளையின் சுறுசுறுப்பு கூடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூயிங்கம் மெல்லுதல்: சூயிங்கம் மெல்லுவதை ஒரு நல்ல பழக்கமாகக் கருத முடியாது. இப் பழக்கம் நமக்கு பொது இடங்களில் மரியாதை பெற்றுத் தராது. ஆனால் சூயிங்கம் மெல்லுவதால் உடலின் சக்தியும், மூளையின் செயல்பாடும் அதிகரித்து, மன அழுத்தம் குறைவதாக டாக்டர் கின் யா குபோ என்ற ஆய்வாளர் அடித்துக் கூறுகிறார்.

வீடியோ கேம்: குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர் விரும்ப மாட்டார்கள். ஆனால் வலிப்பு நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீடியோ கேம் விளையாட மருத்துவர்கள் அனுமதிக்கிறார்கள். அதன் மூலம், அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைப்பு உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.