Recent Posts
recent

கேக் அதிகம் சாப்பிடுவீங்களா? அத சாப்பிட்டதும் உடலில் என்ன நடக்குதுன்னு தெரியுமா?

புத்தாண்டு ஆகட்டும் அல்லது பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகட்டும், கேட் வெட்டாமல் எந்த ஒரு கொண்டாட்டமும் நிறைவு பெறுவதில்லை. கேக் பலருக்கும் பிடித்த ஓர் உணவுப் பொருள். இந்த கேக்குகளில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெரைட்டி அல்லது ப்ளேவர்கள் பிடிக்கும். கேக்குகள் நம் சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்தக்கூடியவை.

நாம் விரும்பும் கேக்குள் ஜங்க் உணவுகளுள் ஒன்று. நிச்சயம் ஜங்க் உணவுகள் நம் சுவை மொட்டுக்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால் அதே சமயம் அது நம் ஆரோக்கியத்திற்கு உலை வைப்பதில் முதன்மையானது என்பது தெரியுமா? இத்தகைய கேக்கை அளவாக, எப்போதாவது ஒருமுறை சாப்பிட்டால் அதனால் தீவிர பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்காது.

அதுவே கேக்கை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதனால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். இப்போது இக்கட்டுரையில் கேக்கை சாப்பிடும் போது, உடலில் என்னவெல்லாம் நடக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

உடல் பருமன் 
ஒருவர் கேக்கை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள், உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை அதிகரிக்கும்.

சர்க்கரை நோய்
 கேக் தயாரிக்கும் போது, அதில் சுவைக்காக சர்க்கரையை அதிகமாக சேர்ப்போம். சர்க்கரை நிறைந்த கேக்கை அதிகம் சாப்பிடும் போது, அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை நோய்க்கான அபாயத்தை அதிகரித்து, உடலின் இதர செயல்பாட்டையும் பாதிக்கும்.

ஆற்றல் ஊக்கி சர்க்கரை நிறைந்த கேக்கை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, உடலின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் அதே சமயம் கணையம் க்ளுக்கோஸை க்ளைகோஜனாக மாற்றத் தேவையான இன்சுலினை அதிகளவு சுரக்கும். இந்நிலையில் உடலில் மன அழுத்த ஹார்மோன்களான அட்ரினலின் மற்றும் கார்டிசோல் தூண்டப்பட்டு, இதயத் துடிப்பை அதிகரித்து, சில சமயங்களில் மாரடைப்பு, படபடப்பு போன்றவற்றை ஏற்படுத்தி மிகவும் ஆபத்தை உண்டாக்கும்.

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்
 கேக்கில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். அதிலும் அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷியனில் வெளிவந்த ஆய்வில் 100 கிராம் கேக் சாப்பிட்ட 5 மணிநேரத்தில் இரத்த வெள்ளையணுக்களின் அளவு குறைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு தேக்கம்
கல்லீரல் மற்றும் தசைகள் நிரம்பிய பின், உடலில் உள்ள எஞ்சிய கிளைகோஜன், உடலில் கொழுப்புக்களாக ஆங்காங்கு தேங்கிவிடும். இதனால் தான் அதிகம் கேக் சாப்பிடுபவர்களின் உடலில் ஆங்காங்கு தசைகள் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதய பிரச்சனைகள்
2007 இல் கால்கெரி பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டவர்களது இரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன், இதயத்தின் செயல்பாடும் கடுமையாக இருப்பது கண்டறியப்பட்டது. கேக்கில் கொழுப்புக்கள் அதிகம் என்பதால், அதிகளவு கேக்கை சாப்பிடும் போது, அது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஞாபக மறதி 
டைப்-2 சர்க்கரை நோய் கொண்டவர்கள் கேக் சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு ஆய்வில், கேக்கில் உள்ள வெண்ணெய் மற்றும் எண்ணெய் உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அதுவும் 2008 இல் பேபிகேர் சென்டரில் உள்ள ஆய்வாளர்கள் கொழுப்பு மிக்க உணவுகளை உட்கொண்டவர்களது நினைவாற்றலை சோதித்தனர். அப்போது கொழுப்பு குறைவான உணவை உட்கொண்டவர்களை விட, கொழுப்பு அதிகமான உணவை உட்கொண்டவர்களது நினைவாற்றல் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

 கொலஸ்ட்ரால்
கேக்கில் பயன்படுத்தப்படும் வெண்ணெய் அல்லது மார்கரைன் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

மனநிலை மாற்றம்
சில கேக்குகளில் சேர்க்கப்படும் மாரிஜூவானா மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் ஏற்றஇறக்கமான மனநிலை, மன இறுக்கம், பதட்டம், அதிக உணர்ச்சிவசப்படுதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

 செரிமான பிரச்சனைகள்
தற்போது வெல்வெட் கேக் மக்களிடையே பிரபலமாக உள்ளது. ஆனால் இந்த கேக்குகளில் சேர்க்கப்படும் நிறமூட்டும் பூச்சுக்கள், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் மயக்கம், தளர்ந்து போதல், பலவீனமான உணர்வு போன்றவற்றை சந்திக்க வைக்கும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.