Recent Posts
recent

சுக்குப்பற்று, நொச்சியிலை நீராவி... தலைவலியைப் போக்கும் இயற்கை மருந்துகள்!!!

தலைவலி வந்தால், முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம் தெரிந்தால்தான் தக்க சிகிச்சை பெறமுடியும். நீண்ட நாள்களாக இந்தப் பிரச்னை இருந்தால், அதற்கான பரிசோதனைகளைச் செய்யவேண்டும்.

தலைவலி என்பது பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னைகளில் ஒன்றாகிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வேலைப்பளு காரணமாகப் பலருக்கு வரலாம். சிலருக்கு மன அழுத்தத்தாலும் வரும். நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதால் சிலருக்குத் தலைவலி வரலாம். கண்களில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் வரலாம். மூக்கடைப்பு, சளித்தொல்லை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் தலைபாரத்துடன் கூடிய வலி வரக்கூடும்.

சரியாக உறங்காவிட்டாலும் தலைவலி வரும். இரவுப்பணி செய்வோர் இந்தத் தீராத வலியைத் தவிர்க்க முடியாமல் சுமப்பார்கள். மலச்சிக்கல் காரணமாகவும் இது வர வாய்ப்புள்ளது. சிலருக்குப் பயணங்களால் தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தம் இருந்தாலும், வலியோடு தலைசுற்றலும் சேர்ந்துகொள்ளும்.

தலைவலி வந்தால், முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம் தெரிந்தால்தான் தக்க சிகிச்சை பெறமுடியும். நீண்ட நாள்களாக இந்தப் பிரச்னை இருந்தால், அதற்கான பரிசோதனைகளைச் செய்யவேண்டும். வயதுக்கு ஏற்ப வலியின் தீவிரம் மாறுபடும்.

தொடர் வேலை, மன அழுத்தம் காரணமாக இத்தகைய வலி வந்தால் எல்லா வேலைகளையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஓய்வெடுக்கவேண்டும். சூடான நீர், சூப், பிளாக் டீ, க்ரீன் டீ போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் குடிக்கலாம். மன அழுத்தம் இருந்தால் சிந்தனைகளை மாற்றி மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வலி என்றதும் மருந்துக்கடைகளில் சென்று மாத்திரை வாங்கிப் போடுவதையே நம்மில் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். பொதுவாக மூக்கடைப்பு, சளி, தலைவலி போன்ற தொந்தரவுகள் இருந்தால், நீராவி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். தூய்மையான நீரைக் கொதிக்கவைத்து அதில் நொச்சியிலை அல்லது வேப்பிலையைப் போட்டு போட்டு உடலை முழுமையாக மூடி முகத்தில் ஆவிபடுமாறு செய்ய வேண்டும். இதனால் முகம் மற்றும் தலைப்பகுதியில் தேங்கியிருக்கும் நீர் வெளியேறி தலைபாரம் குறையும். அத்துடன் மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகளும் குறையும்.

மலச்சிக்கலைச் சரிசெய்தாலே வலித் தொந்தரவுகளைத் தவிர்த்துவிடலாம். தினமும் காலை உணவோடு பப்பாளி சாப்பிட்டால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். திரிபலாச் சூரணம், கடுக்காய்ப் பொடி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு டீஸ்பூன் அளவுக்கு வெந்நீரில் போட்டு இரவு உறங்கச் செல்லும்முன் குடிப்பதும் மலச்சிக்கலுக்குத் தீர்வுதரும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல், தலைவலி, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

சுக்கை நீர்விட்டு உரசி நெற்றியில் பற்றுப் போட்டால் எந்தத் தலைவலியாக இருந்தாலும் ஓரிரு நிமிடங்களில் ஓடிவிடும்.
இதில் மிக மோசமானது `மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி. ஒரு பக்கமாக வலிக்கும். ரத்தச்சோகை, உயர் ரத்தஅழுத்தம், மூளை அழற்சி, மூளைக்கட்டி காரணமாகவும் தலையின் ஒரு பக்கமாக வலி ஏற்படலாம்.

`மைக்ரேன்' ஆக இருந்தால் அதற்கான மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துகொள்வது நல்லது. மனஅழுத்தம், மனச்சோர்வினால் வரும் தலைவலியாக இருந்தால் அதற்கு யோகா சிறந்த பலனளிக்கும். இயற்கை மருத்துவமுறையில் தலைக்கு ஆயில் மசாஜ் செய்வதும் சிறந்த பயனளிக்கும்.

அக்குபஞ்சர் சிகிச்சையும் இத்தகைய வலிகளுக்குச் சிறந்த தீர்வைத் தரும். ஊசிகள் வலி நிவாரணிகளாகச் செயலாற்றும். வலி மாத்திரைகளுக்குப் பதில், சிறந்த மாற்று, அக்குபஞ்சர் சிகிச்சையாகும்.யோகா, மூச்சுப் பயிற்சிகளும் பலனளிக்கும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.