Recent Posts
recent

உணவுமுறை மாற்றம், யோகாவால் தைராய்டை குணமாக்கலாம்!!!

உலக மக்கள்தொகையில் 3 சதவிகிதம் பேருக்கு தைராய்டு குறைபாடு காணப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமுமே தைராய்டு வரக் காரணமாகின்றன. இது, பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று கருதவேண்டாம். இருபாலாரையும் எந்தவித பேதமுமின்றி பாதிக்கும் குறைபாடு இது. பெண்களைக் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கிறது.

தைராய்டு என்பது ஒரு நோய் அல்ல. அயோடின் குறைபாட்டால் கழுத்துப் பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அழற்சியை ஏற்படுவதையே 'தைராய்டு' என்கிறோம். இது ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்குச் சுரப்பியின் செயல்பாடு அதிகரிப்பதால் ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதிக பசி உண்டாகும். ஆனாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இதயத்துடிப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கைகால் நடுக்கம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் குறைபாடு, அதிக வியர்வை மற்றும் வயிற்றுப்பிரச்னைகள் உண்டாகும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இதய நோய், எலும்புத் தேய்மானம், பார்வைக் குறைபாடு போன்றவை ஏற்படும். இவர்களால் அதிக வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது.

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவதைக் குறிக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்கும். உடல் எடை அதிகரிக்கும். பெரும்பாலும் இதய நோய், வலிப்பு நோய் மற்றும் புற்றுநோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளே இத்தகைய நிலையை உருவாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்தக்குறைபாடு பாதிப்பு மூளையில் உள்ள `ஹைப்போதாலமஸ்' தைராய்டைக் கட்டுப்படுத்தத் தவறுவதால் ஹார்மோன் உற்பத்தி குறைந்தும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. தோலில் வறட்சி, அடிக்கடி சளி பிடித்தல், உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமை போன்ற பிரச்னைகள் இருக்கும்.

தைராய்டு ஏற்பட முக்கியக் காரணம் உணவு முறையே. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருள்கள்தான் தைராய்டு சுரப்பியை சிதறடிக்கச் செய்துவிடுகிறது. இதனால் சத்துக் குறைபாடு உண்டாகிறது. இத்தகைய சூழலில் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு, கருமுட்டையில் கட்டி போன்றவை உண்டாகின்றன. இதனால்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வேலை செய்வதைக் கட்டுப்பாட்டில் வைக்க மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவும். அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவும்.

விபரீதகரணி என்ற ஆசனம் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகும். இதனால் தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். ஹாலாசனம் செய்வதால் தலைக்குப் பின் பகுதியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்றாக வேலை செய்யும். அத்துடன் தைராய்டு, பாரா தைராய்டு ஆகிய சுரப்பிகள் நன்றாக சுரக்கத் தொடங்கும். ஆக, உடல்நலத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் சீராகச் சுரக்கும்.

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தேங்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பசலைக்கீரை, சிவப்பரிசி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.