Monday, April 21 2025

சிவப்பான நிறம் பெற நீங்கள் இந்த பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

தயிர் ஒரு இயற்கையான பொருளாகும். இது ஒவ்வொரு வீட்டிலும் மிக எளிதாகக் கிடைக்கின்றது. தயிர் பளபளப்பான தோற்றத்தை தந்து சருமத்தை பொலிவாக்குகின்றது.

நாம் பளபளப்பான சருமத்தை பெற தயிரை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இன்று, போல்ட்ஸகையில் வெண்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற தயிரை பயன்படுத்தும் பல்வேறு வழிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய வழிகளை நீங்கள் உங்களுடைய அழகு பராமரிப்பு முறைகளுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த அற்புதமான வழிகளை முயற்சி செய்து நீங்கள் உங்களுடைய செலவு மிகுந்த மற்றும் ரசாயன அழகு சாதனப் பொருட்களுக்கு விடை கொடுக்கலாம். எனினும், இதனைப் பயன்படுத்தும் முன்னர், அலர்ஜி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.

1. தயிர் அரிசிமாவு கலவை: பளபளப்பான மற்றும் வெண்மையான சருமத்தைப் பெற நீங்கள் தயிருடன் அரிசிமாவு சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஒரு தேக்கரண்டி புதிய தயிருடன், ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை மிகவும் மெதுவாக முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.

2. தயிர் உருளைக்கிழங்கு மற்றும் கிளிசரின் கலவை: தயிரின் வெண்மையாக்கும் பண்புகள் உருளைக்கிழங்கு சாறு மற்றும் கிளிசரினுடன் இணைந்து உங்கள் தோலின் நிறத்தின் மீது பல்வேறு அதிசயங்களை செய்து விடும். இதற்காக புத்தம் புதிய தயிர் 1 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு சாறு 1 தேக்கரண்டி, மற்றும் கிளிசரின் 2 சொட்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை உலர விடவும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

3. தயிர், தக்காளிச்சாறு, மற்றும் தேன் கலவை: அற்புதத்தை அளிக்கும் இந்தக் கலவையை தயாரிக்க, 1 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி தக்காளி சாறு, மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை பயன்படுத்தி வர உங்களுக்கு பளபளப்பான சருமம் கிட்டும்.

4. தயிர் கற்றாழை கூழ் மற்றும் ஆலிவ் எண்ணெய்: தயிர், கற்றாழை கூழ் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றும், இயற்கையாகவே உங்களுடைய தோலை பளபளக்கச் செய்யக்கூடிய பொருட்களாகும். இதைத் தயாரிக்க ஒரு தேக்கரண்டி தயிருடன், இரு தேக்கரண்டி கற்றாலை கூழ் மற்றும் மூன்று சொட்டு ஆலிவ் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இந்தக் கலவையை உங்களுடைய முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்

5. தயிர், எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் கலவை: ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள ஓட்ஸ் கஞ்சியை ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் 2 தேக்கரண்டி எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை மிகவும் மெதுவாக உங்களுடைய முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். இந்தக் கலவை உலரும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். ஈரம் உலர்ந்த பின்னர் மிகவும் லேசான முக டோனர் பயன்படுத்த வேண்டும்.
6. தயிர் மற்றும் வெள்ளரிக்காய்: தயிரைப் பயன்படுத்தி பளபளப்பான சருமத்தை பெறக்கூடிய வழிகளில் இது மிகவும் சிறந்த்ததாகும். வெள்ளரிப் பழத்தை நன்கு பிசைந்து அதனுடன் தயிரை நன்கு கலக்க வேண்டும். அதன் பின்னர் இந்தக் கலவையை முகத்தில் மிகவும் மெதுவாக நன்கு தடவ வேண்டும். இந்தக் கலவை உலர சுமார் அரைமணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்னர் இளஞ்சூடான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

7. தயிர் மற்றும் ரோஸ் வாட்டர், மற்றும் ஆரஞ்சு தூள் கலவை: ஆரஞ்சு தூளில் உங்களுடைய முகத்தை சிகப்பாகச் செய்யும் காரணிகள் மிக அதிக அளவில் உள்ளன். இந்தத் தூளை 1 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தயிர் மற்றும் சில துளிகள் ரோஜா தண்ணீர் கலக்க வேண்டும். இந்தக் கலவையை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த உங்களுக்கு பளபளப்பான மற்றும் வெண்மையான சருமம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.