Tuesday, April 15 2025

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பாரம்பரிய உணவுகளுக்கு மீண்டும் திரும்புவோம்!!!

நம்முடைய முன்னோர்கள் வரகு, சாமை, திணை, கேப்பை, கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானிய வகைகளை உணவாகப் பயன்படுத்தி வந்தனர். இவற்றில் புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை ஏராளமாக உள்ளது. நாம் உண்டு வரும் பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் வெறும் மாவுச்சத்து மட்டும்தான் உள்ளது. வைட்டமின்-டி, இரும்புச்சத்து போன்றவை இருக்காது. கைக்குத்தல் அரிசியால் செய்யப்படும் உணவை அதிகமாக சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காது.

இவற்றோடு உணவுக்கு சுவைகூட்டவும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரவும் நாட்டு காய்கறிகள், செக்கு எண்ணெய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டனர். இந்தப் பட்டியலில், கொய்யா, பப்பாளி, வாழை, பூவன் பழம் போன்றவை தவறாமல் இடம் பெறும். அவரை, புடலை, வாழைப்பூ, பூசணிக்காய், வாழைத்தண்டு போன்றவற்றை நம் பாரம்பரியத்தோடு தொடர்புடைய காய்கறிகள் எனச் சொல்லலாம்.

இவற்றில், Phytonutrients இருக்கிறது. மேலும், சிறுதானியங்களில் உள்ளதைப் போன்றே, இவற்றிலும் நார்சத்து நிறைய உள்ளது. அவரைக்காயில் புரதச்சத்து உள்ளது. நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், புடலங்காய் ஆகியவற்றில் கலோரி குறைவாக காணப்படும். இந்த காய்கறிகளால் மற்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

ரீஃபைண்ட் ஆயிலில் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே. செக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது ஆரோக்கியம் தரும்.எந்த இடத்தில் விதைத்தாலும் வளர்கிற பழங்கள் அனைத்தும் பாரம்பரியம் உடையவை. குறிப்பாக, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, கற்பூர வாழை, பூவன் வாழை, அத்திப்பழம் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பப்பாளியில் பீட்டா கேரட்டின் சத்தும், கொய்யாவில் வைட்டமின் - சி சத்தும் அதிகம் உள்ளது.

அசைவ உணவில், நாட்டுக்கோழிசாப்பிடுவதே நல்லது. பிராய்லர் வகை கோழிகள் சிறிய இடத்தில் அடைக்கப்பட்டு வளர்வதுடன், தீவனத்துடன் Anti-Biotic மருந்து கொடுத்து வளர்ப்பதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது. பிராய்லர் கோழிகளுக்கு Hormone Injection போட்டு வளர்ப்பதால் அவற்றைச் சாப்பிடும் பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் எய்திவிடுகிறார்கள்.

நிலத்தில் இருக்கக்கூடிய நீரைப் பொறுத்தும் அந்த மண்ணை பொறுத்தும் விளையக்கூடிய உணவுதான் அவரவருக்கான உணவு. அதுவே இயற்கையான உணவாகவும், ஆரோக்கியமான உணவாகவும் பாரம்பரியமான உணவாகவும் இருக்கும். ஆனால், இன்று நம் பாரம்பரிய உணவுகளைத் தொலைத்துவிட்டு நம் சூழ்நிலைக்கு ஒத்துவராத உணவையும், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவையுமே உண்டு வருகிறோம்.

உடல்பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம், செரிமான மண்டல பாதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள், எலும்பு தேய்மானம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கு முக்கிய காரணம் நம் உடலுக்கு சம்பந்தமில்லாத உணவை உண்டுவருவதே ஆகும்.

இயற்கையான பாரம்பரிய உணவுகளையே விவசாயம் செய்ய வேண்டும். நாம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவாக இருந்தாலும், அருந்தும் பானமாக இருந்தாலும் இயற்கையாக இருக்க வேண்டும். அல்லது நாமே வீட்டில் தயார் செய்ததாக இருக்க வேண்டும். வளமாகவும், சுதந்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு இதுவே சிறந்த வழி.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.