Recent Posts
recent

கண்கள்... அழகுடனும் ஆரோக்கியத்துடனும் மிளிர... எளிய வீட்டுக் குறிப்புகள்! #BeautyCare

விதவிதமான அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அழகாகக் காண்பித்துக்கொள்கிறோம். ஆனால், பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோமா? கண்கள் மீது அக்கறையாக இருக்கிறோமா..? நம் கண்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள எளிமையான டிப்ஸ் வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

1. தூக்கம் அவசியம்:
முதலாவதாக, நல்ல தூக்கம் அவசியம். குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லாதபோது, கருவளையம், கண்ணைச் சுற்றி கோடுகள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். நல்ல தூக்கம் புத்துணர்ச்சியான கண்களைப் பெற்றுத்தரும்.
2. கேட்ஜெட் கவனம்:
கேட்ஜெட்களைப் பயன்படுத்துவதாலும் கண்ணில் பிரச்னைகள் ஏற்படலாம். கேட்ஜெட்களை அதிக அளவில் பயன்படுத்தும்போது, கண்களை இமைக்க மறந்துவிடுவதாக ஆய்வு சொல்கிறது. எனவே, கேட்ஜெட் பயன்படுத்தும்போது, குறைந்தபட்சம் அரை மணி நேரத்துக்கு பிரேக் எடுக்கவும். கண்களை 10 முதல் 20 வரை மூடி மூடித் திறக்க வேண்டும்.
3. கைகளே போதும்:
உங்கள் உள்ளங்கைகளால் கண்களை பொத்திக்கொள்ளவும். பின்னர், கண்களைத் திறந்து அந்த இருட்டைப் பார்க்கவும். இதனால், கண்களைச் சுற்றியுள்ள தசைகள் சீராக இயங்கும். கண்களின் ஸ்டிரெஸும் குறையும்.

இவற்றைத் தவிர, வீட்டிலிருந்தே கண்களைப் பாதுகாக்க எளிமையான ஹெர்பல் டிப்ஸ்:
1. கிளியோபட்ரா காலம் முதல் இப்போது வரை!
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, வெள்ளரிக்காய்தான் கண்களுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட். கண்களை மூடிக்கொண்டு,  நறுக்கிய வெள்ளரிக்காயை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவளையம் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.
2. உருளைக்கிழங்கும் வெள்ளரியும் ஃபெஸ்ட் ப்ளீச்
வெள்ளரிக்காய் - 1/2
உருளைக்கிழங்கு - 1/2
மஞ்சள் தூள் - சிறிதளவு
எலுமிச்சை - 1
வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் துருவிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ளவும். பின்னர், கண்களின் மேல் ஒரு காட்டன் துணியை வைத்துக்கொண்டு அதன்மேல் இந்தக் கலவையை பூசிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் வைத்திருந்து கண்களைக் கழுவவும். (இவை, நேரடியாகக் கண்களின் மேல் படக்கூடாது). இவ்வாறு பயன்படுத்துவதால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 
3. ஸ்டிராபெர்ரி:
ஸ்டிராபெர்ரி பழத்தை மெல்லியதாக ஸ்லைஸ் செய்து, கண்களின் மேல் நேரடியாக வைத்துக்கொள்ளவும். இது, கருமையை நீக்கி, புத்துணர்ச்சியை அளிக்கும்.
4. காட்டன் பந்து:
காட்டன் பந்துகளை எடுத்து, அவற்றைக் குளிர்ந்த பாலில் நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த வேண்டும். இதன்மூலம் கண்களில் உள்ள அழுக்கை நீக்கலாம்.
5. ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து கண்களை துடைத்து வந்தால், கண்களுக்குப் பொலிவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
6. சோம்பு:
ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவி வந்தால், கண்களின் சோர்வு நீங்கும்.
7. சாமந்திப்பூ:
சாமந்திப்பூ சருமத்துக்கு மிகவும் நல்லது. ஒரு கைப்பிடி அளவு சாமந்தி இதழ்களை எடுத்து, ஒரு லிட்டர் சுடுநீரில் போடவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு, அதனை வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எப்போதெல்லாம் கண்களில் சோர்வாக உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் இந்த நீரால் முகத்தைக் கழுவினால் புத்துணர்ச்சி ஏற்படும்.
8. வைட்டமின் ஏ:
'வைட்டமின் ஏ' உள்ள பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளவும். மாம்பழம், ஆரஞ்சு போன்ற மஞ்சள் பழங்களை அதிகம் சாப்பிடலாம். கேரட், ஸ்வீட் உருளைக்கிழங்கு போன்றவையும் கண்களுக்கு ஏற்றவை.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.