Recent Posts
recent

சரும சுருக்கங்களை போக்கும் மிக முக்கியமான குறிப்புகள்!!!

முகத்தில் ஏற்படுகிற சுருக்கங்கள் தான் இன்றைக்கு அழகு தொடர்பாக மிக முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது, பருக்களோ அல்லது வேறு ஏதேனும் மார்க் ஏற்பட்டால் சந்தையில் கிடைக்கிற சில க்ரீம்களை பயன்படுத்தி தற்காலிகமாக மறைத்துக் கொள்ள முடியும். ஆனால் சுருக்கங்களை எல்லாம் அப்படி மறைத்துக் கொள்ள முடியாது.

என்ன தான் மேக்கப்-போட்டாலும் அந்த சுருக்கம் அப்படியே தனியாக தெரியும். நெற்றி,கண்கள், வாய்ப்பகுதிகளில் தான் முதலில் சுருக்கங்கள் தோன்றும். இப்போது வாய்ப்பகுதியில் ஏற்படுகிற சுருக்கங்களை தவிர்க்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். நெற்றி மற்றும் கண்களுக்கு அருகே சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையானது ஆனால் இந்த வாய்ப்பகுதியில் ஏற்படுகிற சுருக்கங்களுக்கு நம்முடைய பங்களிப்பு தான் முக்கிய காரணியாக இருக்கிறது. அதோடு அவற்றை நாம் எளிமையாக தவிர்க்கவும் முடியும்.

காரணங்கள்

சுருக்கங்கள் ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள் என்னென்ன என்பதை முதலில் பார்க்கலாம். இவற்றிலில் முதலில் நிற்பது வயது. வயதானாலே சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். சருமத்தில் இருக்கிற கொலாஜன், எலாஸ்டின் ஆகியவை குறைந்து விடுவதால் தசைகள் வலுவிழந்து காணப்படும்.

அதிகமாக புகைப்பிடிப்பவர்கள், மதுப்பழக்கம் கொண்டவர்கள்,நீண்ட நேரம் வெயிலில் பணியாற்றுபவர்கள், தடாலடியாக பத்து கிலோ அல்லது அதகும் மேலும் எடையைக் குறைப்பவர்கள், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்கள், சருமத்தை சரியாக பாராமரிக்காதவர்கள் ஆகியோருக்கு இளமையிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

முகத்தில் குறிப்பாக வாய்ப்பகுதியில் சுருக்கங்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய நீங்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய நடைமுறை என்னென்ன என்று பார்க்கலாம்.

கற்றாழை ஜெல்

இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த ஜெல் மிகச்சிறந்த தீர்வாக அமையும். இதனை ஆரம்ப கட்டத்திலேயே பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்த்திடலாம். சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து அப்படியே பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிக் கொள்ளுங்கள். ட்ரை ஸ்கின்னாக இருப்பவர்களுக்கு உடனேயே ஜெல் உறிந்து கொண்டு விடும். இல்லையென்றால் பத்து நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளலாம்.

விட்டமின் இ ஆயில்

விட்டமின் இ ஆயில் நம் சருமத்தை ஈரப்பதத்துடன் நீண்ட நேரம் வைத்திருக்க உதவிடும்.

ஒரு ஸ்பூன் விட்டமின் இ எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். விட்டமின் ஈ ஆயில் கிடைக்க வில்லை என்றால், விட்டமின் இ கேப்சூல்கள் இரண்டு அல்லது மூன்று எடுத்து அந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

அந்த எண்ணெயை வாய் அருகில் சுருக்கங்கள் இருக்கிற இடத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திட வேண்டும்.

ஒரு முறை மசாஜ் செய்த பின்னர் பத்து நிமிடம் கழித்து மீண்டும் மசாஜ் செய்திட வேண்டும் முதலில் மசாஜ் செய்த போது எண்ணெய் சருமத்தால் உறிந்து கொள்ளப்பட்டிருக்கும்.

இரண்டு முறை மசாஜ் செய்த பிறகு பத்து நிமிடம் கழித்து கழுவி விடலாம்.

முட்டை

முட்டையின் வெள்ளைக்கருவுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து சரியாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவை அப்படியே பேஸ்ட் பதத்திற்கு வந்திடும்.

அதை எடுத்து சுருக்கங்கள் இருக்கிற பகுதிகளில் தேய்க்க வேண்டும்.பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தை டயிட்டாக பிடித்துக் கொள்ள உதவிடுகிறது.

அதே போல தேங்காய் எண்ணெய் சருமத்தின் வறட்சியை போக்க உதவிடும்.

தக்காளிச் சாறு

ஒரு தக்காளியை மைய அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு வாயின் ஓரங்களில் மசாஜ் செய்ய வேண்டும்.

மசாஜ் செய்து விட்டு மீதமிருப்பதை பேக்காக போட்டுக் கொள்ளலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சருமத்தில் புதிய செல்கள் உருவாவதை அதிகரிக்கும்.

அரை மணி நேரம் கழித்து தண்ணீரால் கழுவிடலாம். இது சருமத்தின் சுருக்கங்களை போக்கிடும்.

தக்காளியில் விட்டமின் ஏ, விட்டமின் பி6 , விட்டமின் சி, லைகோபின்,பீட்டா கரோட்டீன் ஆகியவை இருக்கின்றன.

அன்னாசிப்பழச் சாறு

சருமத்தில் இருக்கிற செல்களை மேம்படுத்த இது பெரிதும் உதவுகிறது. தக்காளி ஜூஸ் மட்டுமல்லாது அன்னாசிப் பழச்சாறினையும் நாம் இதற்கு பயன்படுத்தலாம்.

இதில் ப்ரோமெலைன் என்சைம் இருக்கிறது. இவை சரும சுருக்கங்களை போக்க பெரும் பங்காற்றுகிறது.

அன்னாசிப்பழச்சாறினை எடுத்து சுருக்கம் உள்ள இடங்களில் தடவி பத்து நிமிடம் வரை காத்திருந்து கழுவிடலாம்.

சூரிய ஒளி

சருமத்திற்கு சூரிய ஒளி தேவை தான். ஆனால அவை அளவுக்கு மீறி செல்லும் போது அது நமக்கு தீங்கினை தான் ஏற்படுத்தும்.

சூரிய ஒளி சருமத்தின் எலாஸ்டிஸ்டியை போக்கிடும். இதனால் வெகு சீக்கரத்திலேயே சருமம் தொங்கி அசிங்கமாகத் தெரியும்.

இந்த நேரத்தில் நீங்கள் சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை, போதுமானாளவு தண்ணீர் குடிக்க வில்லை எனும் பட்சத்தில் அது விரைவில் அதன் வேலையை காட்டத் துவங்கிடும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

சருமத்திற்கு, உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிற ஒரு காம்பினேஷன் இது. தொண்டை வலி, உடல் எடை குறைக்க எல்லாம் இதனை சூடான தண்ணீரில் கலந்து குடிக்கச் சொல்வார்கள்.

இந்த இரண்டிலுமே விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அதிகமாக இருக்கிறது. இவை சருமத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால் சரும சுருக்கங்களிடமிருந்து உங்களை காத்திடும்.

ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சூடான தண்ணீர் மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சுருக்கங்கள் இருக்கிற பகுதிகளில் தடவி சுமார் பதினைந்து நிமிடம் வரை காத்திருக்க வேண்டும் அதன் பின் கழுவிக்கொள்ளலாம்.

என்ன தான் இந்த முறைகளை பின்பற்றினாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்.

பால் பவுடர்

பால் பவுடர் மற்றும் தேன் ஆகியவற்றை பயன்படுத்தி சரும சுருக்கங்களை தவிர்க்க முடியும். பால் பவுடர் சருமத்தை சாஃப்டாக்கிடும். தேன் சருமத்திற்கு ஈரப்பதம் நிலைத்திருக்கச் செய்திடும்.

இரண்டு ஸ்பூன் பால் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.வாயைச் சுற்றி சுருக்கங்கள் உள்ள இடத்தில் அதை அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து அவை காய்ந்ததும் கழுவிடலாம்.

உணவு

உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, சருமம் தொடர்பான பிரச்சனையாக இருந்தாலும் சரி, முதலில் உங்கள் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் சரிவிகிதமாக கிடைக்கிறதா என்பதைப்பாருங்கள்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தான் இவற்றில் முதல் படியாக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற சத்தான காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

சத்துக்குறைப்பாட்டின் வெளிப்பாடாக கூட உங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் தோன்றிடலாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது, அதன் பின்னர் சீரான தூக்கம், வேலைப்பளூ, மன அழுத்தம் ஆகியவற்றினால் தூக்கத்தை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.