Recent Posts
recent

பனை மரத்தின் பயன்கள்

மனித உடலுக்குள் கண்களுக்கு தெரியாமல் இருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமானது, கல்லீரல். இது சரியான முறையில் இயங்கினால்தான் மற்ற அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க முடியும். உணவுப்பொருள் செரிமானம், ரத்த உற்பத்தி, நச்சுப்பொருள் உற்பத்தி, ரத்த சிதைவு என இவற்றிற்கெல்லாம் முக்கிய உறுப்பாக கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் வீக்கம் அடைந்தால் அது புற்று நோயாகவும் மாறக்கூடும். இதுபோன்ற கல்லீரல் உபாதைகளுக்கு சரியான மருந்தாக இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம், பனை மரம்.

தமிழ்நாட்டில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் தமிழக அரசின் சின்னமாகவும் அது விளங்கி வருகிறது.

பனை மரத்தின் மருத்திவ குணங்கள் - YouTube

பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர் அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய குளிர்ச்சியான பானமாகும். இந்தப் பதனீர் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது; உடலைக் குளிர்ச்சியாக வைக்கிறது. எலும்பு களையும், கல்லீரலையும் பலப்படுத்துகிறது. பதனீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு ஆகியவையும் மருத்துவ குணங்கள் கொண்டவை. தமிழகத் தென் மாவட்டங்களில் தை மாதம் முதல் பனை மரத்தில் இருந்து பதனீர் இறக்க ஆரம்பிப்பார்கள்.

ஆடி மாதம் வரை பதனீர் கிடைக்கும். பதனீரில் அடங்கியிருக்கும் சத்துகள்: சர்க்கரை சத்து, கால்சியம், தையாமின், வைட்டமின் சி. நிகோனிக் அமிலம், புரதம். பதனீர் எடுக்காத பனை மரத்தில் இருந்து பனங்காய்களை வெட்டி எடுக்கப்படும் நுங்கு, இனிப்பு சுவைமிக்க நல்ல உணவாகும்.

மரங்களில் பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என்று இரண்டு வகை உண்டு. பெண் பனையில் இருந்துதான் குறும்பைகள் காய்க்கும். அது நன்கு முற்றினால் பனம் பழம். பழுக்காமல் இருந்தால் பனங்காய் என்றும், சிறிய அளவில் குறும்பலாக இருக்கும்போது நுங்கு என்று அழைக்கப்படும். இப்படி மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடல் உறுப்புகளை வலிமை யாக்கும் மருந்தாகவும் பனை மரம் உதவுகிறது. பனம் பூவை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி மருந்தாக பயன்படுத்தலாம்.

இதன்மூலம் சிறுநீர் பெருக்கு, வாய்வு நோய்கள், பல் வலி, நாள்பட்ட காய்ச்சலுக்கும் மருந்தாகி உதவுகிறது. உடல் வீக்கம், நெஞ்சு எரிச்சலும், பித்தக்கோளாறுகளுக்கும் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தையும் குணப்படுத்தவும் பனை பூந்தண்டு சாம்பலை மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பதனீர் ஒரு அற்புதமான இனிப்பு சுவைமிக்க குளிர்பானமாகும். தொடர்ந்து பதனீரை 40 நாட்கள் குடித்து வந்தால் மேக நோய் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும். உடல் வீக்கம், வயிற்றுக்கோளாறு, வெள்ளைப்படு, வெட்டை நோய்களை குணமாக்கவும், சிறுநீர் வெளி யேற்றவும் பதனீர் நமக்கு உதவுகிறது.

கருப்பட்டி உடலுக்கு சுறு சுறுப்பை ஏற்படுத்தி மந்த தன்மையை போக்குகிறது. மேகநோய், ரத்த சோகை, காய்ச்சல் அம்மைச்சூடு, தண்ணீர் தாகத்துக்கும் கருப்பட்டி மருந்தாகும்.  பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச்சிக்கலைத் தீர்க்கக்கூடியது.

Vela Sciences Amazon Store - Buy On Amazon Button - 580x280 PNG ...

எலும்புச்சூடு நோய்க்கு சிறந்த நிவாரணி. கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். கிழங்கை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்.

பனம் பழத்தின் சாறு தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது. பனை மரத்தின் பாகங்கள் மருத்துவத்துக்கு மட்டுமல்ல வீட்டு உபயோகப் பொருட்களாகவும் நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்தார்கள். பனை ஓலையில் பாய், பெட்டி, கூடைகள் முடைந்தார்கள். வீடுகளுக்குக் கூரை வேய்ந்தார்கள். ஓலையை மடக்கி பட்டை செய்து அதில் சாப்பிடவும் செய்தார்கள்.

பனைமர மட்டைகளை வீடு கட்டவும், வேலிகள் அமைக்கவும் பயன்படுத்தினார்கள். மட்டையில் இருந்து நார் எடுத்து கயிறாக்கினார்கள். நாரை கட்டில் கட்டவும், பனை மரத்தின் கட்டிலின் சட்டங்களாகவும் செய்தார்கள். வீடுகள் கட்டவும், ஜன்னல்கள் செய்யவும், வீட்டு நிலைகளுக்கும் பனை மரங்களை பயன்படுத்தி வந்தார்கள்.

பனை மரத்தின் குருத்தோலைகளை வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கும் தோரணங்களாகவும் பயன்படுத்தி வந்தார்கள். இன்றும் விசிறிகள், தொப்பிகள், கலைப்பொருட்கள் செய்து வருகிறார்கள்.

சங்க இலக்கியங்களில் போந்தை, பெண்ணை என்றும் பிற்கால இலக்கியங்களில் தாலம், தாளி, புற்றாளி என்றும் இலக்கியப்பெயரால் பனை மரம் அழைக்கப்பட்டது.இதன் தாயகம் ஆப்பிரிக்காவாக இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்தான் அதிகமாக காணப்படுகிறது. இந்த மரம் வெப்ப மண்டலத்தில் அதிகமாக வளரக்கூடியது. தமிழகத்தில் மட்டும் 5 கோடிக்கு மேல் பனை மரம் இருந்தது. இப்போது ஆண்டுதோறும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

பனை மரம் 30 அடி உயரம் வரை நேராக செங்குத்தாக வளரும். 1 முதல் 3 அடி வரை சுற்றளவு கொண்டது. பனம்பழத்தில் உள்ள கொட்டையை (விதை) மண்ணில் புதைத்து அது வளர்ந்து பருவம் அடையும்வரை பல நிலைகளாக பிரித்துள்ளனர். 22 நாட்கள் விதைப்பருவம். 22 முதல் 90 நாட்கள் வரை கிழங்கு பருவம், 3 முதல் 9 மாதம் வரை நார் கிழங்கு பருவம். 4 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை பீலிப்பருவம். 2 முதல் 10 ஆண்டுகள் வரை வடலிப்பருவம்.

அதன் பின்னர்  முழு வளர்ச்சியைப் பெற்று, பல ஆண்டுகளுக்கு மனிதர்களுக்கு உதவும்.  தமிழகத்தில் பனை மரத்தின் பெயரைக்கொண்ட பல கிராமங்கள் இன்றைக்கும் உள்ளன - பனங்குடி, பனைமரத்துப்பட்டி, பனையூர் முதலானவை.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.