முகம் பளிச்சிட சில பயனுள்ள அழகு குறிப்புகள்...!
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.
முகம், கழுத்து, கண்கள் ஆகிய பகுதிகளில் கருமை மற்றும் அழுக்கை நீக்கி சருமத்தை எப்போதும் பளிச்சென்று பராமரிக்க சில இயற்கையான வழிகள் இதோ,
சிவப்பழகை பெற என்ன செய்யலாம்?
- 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பொலிவடையும்.
- கொட்டை நீக்கிய பேரீச்சைப் பழம் மற்றும் உலர் திராட்சை ஆகிய இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளித்தால் சருமத்தில் உள்ள கருமை நிறம் மாறிவிடும்.
- தினமும் குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்தால் கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் வராது. கண்கள் அழகாக இருக்கும்.
- வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சம அளவு எடுத்து அரைத்து, ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து அதன் மேல் அரைத்த கலவையை 30 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்.
- தக்காளி, ஆப்பிள் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் சம அளவு எடுத்து அதை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி பொலிவாகும்.

கருத்துகள் இல்லை: