தோல் சுருக்கம் நீங்க வேண்டுமா?
தோலின் நெகிழ்வுத் தன்மை குறைவாலும், உலர்ந்து போவதாலும், சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வயதானவர்கள், வெயிலில் அலைபவர்கள், புகை பிடிப்பவர்களுக்கும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
உணவே மருந்து:
தோல் மென்மையாக, சுருக்கங்கள் இன்றி இருப்பதற்கு, தினசரி, 500 மி.கி., வைட்டமின் 'சி' தேவை. இதற்கு, வைட்டமின்-சி, ஏ, நிறைந்த, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் பப்பாளி பழத்தை, தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தினமும் ஒரு கிளாஸ் கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட் அல்லது ஏதாவது ஒரு பழ ஜூசை பருக வேண்டும். தோல் வறண்டு போகாமல் இருக்க, தினமும், எட்டு முதல், 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.
தொடர்ந்து தோலை சுத்தப்படுத்த வேண்டும். அதில், உள்ள பெரிய துளைகளை தக்காளி கூழால் தேய்த்து சுத்தம் செய்வதால், சுருக்கம் ஏற்படாது. வைட்டமின் பி யுடன் கூடிய ஜின்க், தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
வறண்ட சருமம்:
வறண்ட சருமம் உள்ளவர்கள், தங்களின் தினசரி காலை உணவாக, ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள தயிர் மற்றும் ஆறு முதல் எட்டு பாதாம் கொட்டைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். திராட்டை மற்றும் தேன் கலந்து கூழாக்கி, முகத்தில் தடவி, 20-30 நிமிடங்கள் உலர வைத்து, பின்னர் கழுவவேண்டும். திராட்சையில் உள்ள ஆல்பா ஹைடிராக்சி அமிலம் மற்றும் கொலாஜன் சுருக்கங்களை நீக்கும்.
முகத்தைக் கழுவ சோப்பை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, சோப்புத் தன்மை இல்லாத பேஸ் வாஷ்களை பயன்படுத்துவதால், நம் தோலில் உள்ள இயற்கையான வழவழப்பு பாதுகாக்கப்படும்.
உடற்பயிற்சி:
ஊட்டச் சத்துள்ள உணவுடன் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் உள்ள செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜன் போதிய அளவு கிடைப்பதால், நம் சருமம், பளபளவென ஜொலிக்கும்.
வயதாக வயதாக நமது தோற்றம் மாறிக் கொண்டே செல்கின்றது.
சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தந்து விடுகின்றது.
இதற்காக சிலர் கண்ட கிறீம்களையும் செயற்கை முறை ஊசிகள், சத்திரசிகிச்சை போன்றவற்றை செய்வதுண்டு.
ஆனால் இதனால் சில நேரங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்தவகையில் தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
வெயிலில் ஏற்பட்ட கருமை மறைய
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
கண்கள் பிரகாசிக்க
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
கை, கால் முட்டி கறுப்பு நிறம் மறைய
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு போக்க
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும்.
இதற்கு இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
தோல் சுருக்கங்கள் நீங்கி
முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும்.
இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

கருத்துகள் இல்லை: