பாத பராமரிப்பில் தினமும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!
தலைமுடி, முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் உடலின் வேறு எந்த பகுதிக்கும் கொடுப்பது இல்லை. அதிகம் பயன்படுத்தும் கைகளுக்கு கூட நாம் முக்கியத்துவம் தருவது இல்லை. உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம். பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பாதிப்புகள் ஒரு கட்டத்தில் வெளியே சுதந்திரமாக நடமாடும் இயல்பையே முடக்கி வீட்டுக்குள் நம்மை சிறை படுத்திவிடும்.
பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். விரல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். எனவே, இந்த பகுதிகளில் நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
பாதங்கள் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும். வியர்வை, ஈரப்பதம் இருந்தால் காலில் அரிப்புகள் ஏற்படும். இது கால், பாத சருமத்தை பாதிப்படையச் செய்யும். குளித்து முடித்ததும் சரியாக கால்களை துடைக்காமல் சாக்ஸ், ஷூ அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
முகம் மற்றும் கைகளுக்கு எந்த அளவுக்கு மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் தேவையோ, அதே போல் பாதத்துக்கும் அது தேவை. க்ரீம் தடவுவது பாத சருமம் வறண்டு விடாமல் இருக்க உதவும்.
இறந்த செல்களால் எந்த பயனும் இல்லை. எனவே, மாதத்துக்கு ஒரு முறையாவது கால்களை நன்கு அதிகமாக அழுத்தம் தராமல் மென்மையாக தேய்த்து சுத்தம் செய்து இறந்த செல்களை அகற்ற வேண்டும். மாலையில் இதைச் செய்துவிட்டு மாஸ்ச்சைரைசிங் க்ரீம் தடவி இரவு முழுக்க டீஹைட்ரேஷன் கிடைக்க செய்ய வேண்டும்.
முடிந்த வரை சாக்ஸ் அணிவது நல்லது. இது பாதங்களை பாதுகாப்பதுடன், அழுக்கு உள்ளிட்டவை பாதங்களில் சேர்வதைத் தடுக்க உதவுகிறது. உயரமான ஹீல்ஸ் தவிர்த்திடுங்கள். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!

கருத்துகள் இல்லை: