ஞாபக திறனை அதிகரிக்கும் இலந்தை பழம்
இலந்தை பழத்தின் இலை, வேர், பட்டை, பழம் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். இலந்தை பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவை உடையது.
உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது இலந்தை பழம். குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் இலந்தை பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இலந்தை பழத்தில் 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.
இலந்தைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். எனவே மாணவர்கள் இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நினைவாற்றலை அதிகரிக்கும். இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தை பழத்தின் இலளைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் ஆறிவிடும். உடல் சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தை பழம் பெரிதும் பயன்படுகிறது.
உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நன்மை தரும்.
இலந்தை பழத்தின் மருத்துவ பயன்கள்
* மாணவர்களின் ஞாபக திறனை அதிகரிக்க இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
* மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்பு குறைபாடு உள்ள குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
* இலந்தை பழம் பித்தம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
* இலந்தை பழம் பசியின்மையை போக்கி பசியை தூண்ட பயன்படுகிறது.
* பெண்களுக்கு மாதவிலக்கின் பொது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இலந்தை பழம் பயன்படுகிறது.
* இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இலந்தை பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இரவில் தூங்கும் போது இலந்தை பழத்தை சாப்பிட்டால் உடல் வலியை நீங்க செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
* இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: