Recent Posts
recent

முகப்பரு.. கரும்புள்ளி இல்லாம பளிச்னு முகம் இருக்க எலுமிச்சை தேன் ஃபேஸ் பேக்.

முகம் பொலிவு பெற பார்லர் தான் போக வேண்டும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பொருள்களே போதுமானது. இயற்கையான பொருள்கள் சருமத்துக்கு அழகை அள்ளித்தரும். குறிப்பாக எலுமிச்சையும் தேனும் கலந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்துக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Honey Lemon Facepack

முக அழகை பராமரிக்க சந்தையில் அழகு பொருட்கள் விற்கப்படுகின்றன. அதோடு ஸ்பாவுக்கு சென்றும் முகத்தை அழகாக்கி கொள்கிறோம். ஆனால் நன்மையே என்றாலும் சில இராசயனங்களேனும் அவற்றில் கலக்கப்பட்டிருக்கும். இதை சருமத்தின் மீது தொடர்ச்சியாக பூசுவதால் நாளடைவில் பக்கவிளைவுகள் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாக்க பல பொருட்கள் இருக்கும் போது, இந்த கெமிக்கல் பூச்சு எதற்கு. வீட்டில் இருக்கும் எலுமிச்சையும், தேனும் முகத்தை பொலிவு படுத்த போதுமானதாக இருக்கும்.

எலுமிச்சை + தேன் ஃபேஸ் மாஸ்க்​

தேவை :
1/2 தேக்கரண்டி கலப்படமற்ற தேன்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1 முட்டையின் வெள்ளைக்கரு

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, 1 -2 நிமிடங்கள் நுரை வரும் வரை நன்றாக கலக்கவும். பின்னர் அந்த கலவையை, கண் பகுதியை தவிர முகத்தில் மற்ற பகுதிகளில் பூசி விடவும். 20 - 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து முகத்திலிருக்கும் மாஸ்க்கை துடைக்கவும். இப்போது முகம் பளிச்சென்று மின்னும்.

எலுமிச்சை தேன் ஃபேஸ் மாஸ்க் எல்லா சருமத்தினருக்கும் ஏற்றதா?​

முகப்பரு கொண்ட சருமம் இருந்தால் முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பதிலாக, 1 தேக்கரண்டி சமையல் சோடா பயன்படுத்தலாம்.

ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு, கூடுதலாக 1 தேக்கரண்டி தயிர் மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கலாம்.

தோல் அழற்சியை குறைக்க, இரண்டு தேக்கரண்டி தேன், எலுமிச்சை சாறுடன், இலவங்கப்பட்டை சாற்றையும் கலந்து மாஸ்க் தயாரிக்கலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை இரண்டிலும் இயற்கையான மருத்துவ குணநலன்கள் உள்ளன. குறிப்பாக தேன் உங்கள் சருமத்தில் பயன்படுத்த பாதுகாப்பானது.

தேனை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்​

உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவிலும், சருமத்திலும் தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆராய்ச்சியின் படி, இந்த இயற்கையான மூலப்பொருள், பல நன்மைதரும் பண்புகளைக் கொண்டுள்ளது.

honey benefits

பாக்டீரியா எதிர்ப்பு: தேன் பல்வேறு வகையான பாக்டீரியாக்களைக் கொல்லும் என்று கண்டறியப்பட்டது. பொதுவாக உங்கள் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் தான் பருக்களை உண்டாக்கும் என்பதால், உங்கள் முகத்தில் தேனைப் பயன்படுத்துவதால் பருக்கள் உருவாவதை குறைக்க உதவும்.

ஆக்ஸிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு: தேனில் ஃபிளாவனாய்டு மற்றும் பாலிஃபீனால் கலவைகள் உள்ளன. அவை உங்கள் சருமம் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட உதவுகின்றன. அதோடு, ​​சருமத்தில் ஏற்படும் அழற்சியினையும் குறைக்கிறது. அலர்ஜியின் போது ஏற்படும் தோல் சிவத்தல் மற்றும் சரும எரிச்சலைக் குறைகிறது.

ஸ்க்ரப்: தேனில் உள்ள இயற்கையான என்சைம்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற, இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது.

தேனை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள வடுக்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் குறையும். மேலும் உலர் துளைகள் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.

மார்க்கெட்டில் பல வகை தேன் வகைகள் இருந்தாலும், மனுகா தேன் தான் சிறந்தது.

எலுமிச்சை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்​

எலுமிச்சையில் இயற்கையான பழ அமிலங்கள் உள்ளதால், அதனை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், சருமத்தில் எரிச்சல் ஏற்படக்கூடும்.

ஆக்ஸிஜனேற்றம்: எலுமிச்சை சாற்றில் இயற்கையாகவே இருக்கும் வைட்டமின் சி, சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது உங்கள் சருமத்தின் வயதைக் குறைக்க உதவுகிறது.

ஆஸ்ட்ரிஜென்ட் குணங்கள்: இதிலுள்ள அதிக pH அளவுகள், முகத்தில் உள்ள எண்ணெய் பதத்தை குறைத்து, வீக்கத்தை தணிக்கிறது.

பூஞ்சை எதிர்ப்பு: எலுமிச்சையில், பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.

தோல் பளபளப்பு: எலுமிச்சையில் உள்ள அமிலங்கள், வயது புள்ளிகள், முகப்பரு தழும்புகள் உள்ளிட்டவைகளை நீக்கி, சருமத்தை இயற்கையாகவே ஒளிரச் செய்யும்.

எலுமிச்சை மற்றும் தேன் சருமத்துக்கு நன்மை செய்யுமா?​

என்னதான் இயற்கையான பொருளாக இருந்தாலுமே, சில நேரங்களில் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அவற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு உங்கள் சருமத்தின் குணத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு உணர்திறன் சருமம் இருந்தால், உங்கள் முகத்தில் எலுமிச்சை சாற்றை பயன்படுத்த வேண்டாம் என்று தோல் பராமரிப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதோடு, எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை காரணமாக, விட்டிலிகோ என்றும் அழைக்கப்படும் இந்த சரும பிரச்னை கொண்டவர்களும் எலுமிச்சையை பயன்படுத்த வேண்டாம்.

எலுமிச்சை போன்றே தேனைப் பயன்படுத்துவதற்கு முன், கையில் கொஞ்சமாக தடவி பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்! இவற்றில் தோல் சிவப்பாகவோ, வீக்கமாகவோ அல்லது அரிப்பு ஏற்பட்டாலோ, எந்த மூலப்பொருளையும் முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.