பளிச் பளிச் ஸ்கின்னிற்கு இதை ட்ரை பண்ணிப் பாருங்க!!!
தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். தினமும் சரியாக தூங்குவதில்லையா? அப்படியெனில் அது முக அழகை கெடுக்கும். எனவே தவறாமல் தினமும் 8 மணிநேரம் நன்கு தூங்கி எழுந்தால் சருமம் அழகாக இருக்கும்.
வால்நட்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை அன்றாட உணவில் சேர்த்து வர சருமம் அழகாகும். மேலும் வால்நட் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால் முதுமை தள்ளிப் போகும்.
இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.
விளக்கெண்ணெய் சருமப் பிரச்னைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
உருளைக்கிழங்கு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப் புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது கூழை முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்
ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.
தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீயை குடித்து வந்தால் பொலிவான சருமம் கிடைக்கும். மேலும் க்ரீன் டீ போட்ட பின்னர் அந்த இலையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால் சருமம் மென்மையாகும்.
தக்காளியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்துவர உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்.
வாரம் ஒருமுறை சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்ஸைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.
அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய். இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும்.
கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் போட்டு வர, முதுமைத் தோற்றம் எளிதில் அண்டாது.
கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனைத் தடவி வரலாம்.

கருத்துகள் இல்லை: