Recent Posts
recent

தலையில பொடுகா? நரை முடியா? முடி தாறுமாறா கொட்டுதா? பிளாக் டீ இருக்க பயமேன்!!!

இப்போலாம், என்னங்க ரொம்ப கவலையா இருக்கீங்க..? வீட்டுல எதாவது பிரச்சனையா..? இப்படிலாம் கேள்வி கேட்டா பதில் என்னவா இருக்கும்னு தெரியுமா..? ரொம்ப சிம்பிள் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைதான் அதிக அளவுல பதிலா வரும். ஆமாங்க, 10- ல 8 பேருக்கு இந்த முடி சம்மந்தப்பட்ட பிரச்சனையால பாதிக்கப்பட்டுருப்பாங்கனு ஒரு ஆராய்ச்சி தகவல் சொல்லுது.

சிலருக்கு உடல் ஆரோக்கியத்துல பிரச்சனை இருந்தாவோ, சிலருக்கு மன அழுத்தம் அதிகமா இருந்தவோ, வெளியில அதிகமா சுத்துறதாலையோ, இந்த தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் வருதுன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. தலைமுடி பிரச்சனைக்கு பலவிதமான டிரீட்மென்ட்கள் எடுத்து எடுத்து களைச்சு போய்ட்டிங்களா..? இதுவரைக்கும் செய்ததையெல்லாம் விட்டு தள்ளுங்கள். இனி நம்ம பிளாக் டீ இருக்க..பயமேன்...! இந்த பிளாக் டீ முடி வளர்வதற்கும், முடி கொட்டுவதை தவிர்ப்பதற்கும், நரை முடிகளை போக்குவதற்கும் எப்படியெல்லாம் பயன்படுதுனு இனி தெரிஞ்சிப்போம்.

#1 நரை முடி கருப்பாக 

பலரின் மிக பெரிய தொல்லையே இந்த வெள்ளை முடிகள் தான். என்னதான் டை அடிச்சாலும் நம் நரை முடிகள் அவற்றை வீணாக்கி விடுகிறது. சில டைகள் உடல் சார்ந்த பல பிரச்சனைகளையும் ஏற்படுத்த கூடியவை. இதிலிருந்து விடுபட எந்த வித பக்கவிளைவும் இன்றி வீட்டு வைத்தியத்திலேயே இந்த நரையை காணாமல் போக செய்யலாம். 

தேவையானவை :- 

- பிளாக் டீ டீகாஷன் 

- மருதாணி பவுடர் 

- அம்லா பவுடர் 

- இண்டிகோ பவுடர் 

செய்முறை :- 

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்த பின்னர் 1 1/2 டீஸ்பூன் பிளாக் டீ பவுடரை அதில் சேர்த்து அதன் கலர் இறங்கும் வரை கொதிக்க விட்டு பின்பு டீகாஷனை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் 2 டீஸ்பூன் மருதாணி பவுடர், 1 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 3 டீஸ்பூன் இண்டிகோ பவுடர் சேர்த்து கொள்ளவும். பிறகு ஆற வைத்த டீகாஷனை அதனுடன் சிறிது சிறிதாக சேர்த்து பேஸ்ட் போன்று கலக்கவும். இந்த பேஸ்டை 2 மணி நேரம் காட்டன் துணியால் மூடி வைத்துவிடவும். அதன்பிறகு இதனை தலையில் எல்லா இடத்திலும் அப்ளை செய்து 2 மணி நேரம் ஊற வைத்து, பின்பு சிறிதளவு ஷாம்பு போட்டு தலையை அலசவும். 

இப்படி செய்தால் வெள்ளையாக உள்ள உங்கள் முடிகள் அனைத்தும் கரு கருவென மாறி விடும். இந்த முறையை 3 வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.

#2 பொடுகு போக 

இப்போதெல்லாம் பேஷன் என்ற பெயரில் நாம் தலைக்கு சரியாக எண்ணெய்கூட வைப்பதில்லை. இதன் விளைவு பொடுகுகள் அதிகம் கொண்ட தலைதான். இதனால், முடிகள் சத்தற்று கொட்ட தொடக்கி விடும். இதனை சரி செய்ய இந்த முறை உதவுகிறது.

தேவையானவை :- 

- பிளாக் டீ டீகாஷன் 

- எலுமிச்சை 

செய்முறை :- 

ஒரு சிறிய பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்த பின்னரே டீ தூளை அதனுள் போடவும். பின்பு அந்த தண்ணீரில் டீயின் கலர் இறங்கிய பின்னர் வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கலக்கவும். 30 நிமிடம் இந்த கலவையை ஊற விடவும். பிறகு இதனை தலையில் ஒவ்வொரு பாகமாக பிரித்து அப்ளை செய்யவும். 25 நிமிடம் கழித்து தலையை மிதமான நீரில் கழி விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை விரைவில் குணமடையும்.

#3 முடி உதிர்வதை தடுக்க 

இப்போதெல்லாம் எல்லா வயதினருக்கும் முடி கொட்ட ஆரம்பித்து விட்டது. அதிக மன அழுத்தம், தேவையற்ற கெமிக்கல்ஸ், பாஸ்ட் ஃபூட்ஸ் என நிறைய சொல்லி கொண்டே போகலாம். இந்த முடி உதிர்வை தடுக்க டீ டீகாஷன் அருமையான வழியில் பயன்படுகிறது. 

தேவையானவை :- 

- பிளாக் டீ டீகாஷன் 

- ஆம்லா பவுடர் 

-ஆலிவ் எண்ணெய் 

செய்முறை :- 

ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்த பின்னர் 1 1/2 டீஸ்பூன் பிளாக் டீ பவுடரை அதில் சேர்த்து அதன் கலர் இறங்கும் வரை கொதிக்க விட்டு பின்பு டீகாஷனை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு ஆம்லா பௌடரை ஆலிவ் எண்ணெய்யோடு சிறிது சிறிதாக சேர்த்து கொள்ளவும். இறுதியாக இந்த பேஸ்டுடன் டீ டீகாஷனை சேர்த்து 20 நிமிடம் இந்த பேஸ்டை ஊற வைக்கவும். அதன்பின்பு தலையில் இந்த பேஸ்டை தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடி கொட்டுவதை தடுக்கலாம்.

#4 மென்மையான முடி 

காற்று மாசு அதிகரிக்க நம் சருமம் மற்றும் முடிகளும் மென்மை தன்மையை இழந்து மிகவும் வறண்ட பாலைவனம் போல மாறி கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது எளிதான ஒன்றல்ல. இருப்பினும் மென்மையான முடிகளுக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும் என்றால் இந்த முறையை ட்ரை பண்ணுங்கள். 

தேவையானவை :- 

- பிளாக் டீ டீகாஷன் 

- மருதாணி பௌடர் 

- கற்றாழை 

செய்முறை :- இந்த ஹேர் பேக் தயார் செய்ய முதலில் 50g மருதாணி பவுடரை எடுத்து கொண்டு அதனுடன் 15 ml கற்றாழை சாற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்த பின்னரே டீ தூளை அதனுள் போடவும். பின்பு அந்த தண்ணீரில் டீயின் கலர் இறங்கிய பின்னர் வடிகட்டி எடுத்து கொள்ளவும். வடிகட்டிய இந்த டீ டீகாஷனை இதனுடன் சேர்த்து கொண்டு தலையில் அப்ளை செய்யவும். இவ்வாறு செய்தால் உங்கள் கூந்தல் மிக மென்மையாக மாறும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.