Recent Posts
recent

அரசிகள்! - பியூட்டி சீக்ரெட்ஸ்!!!

அரசிகளின் அழகுக் குறிப்பு என்றாலே, நமக்குக் கிளியோபாட்ராவும் அவருடைய கழுதைப்பால் குளியலும்தான் நினைவுக்கு வரும்.

ரோஜாப்பூ எண்ணெயும் கழுதைப்பாலும்!

இது எகிப்திய அரசி கிளியோபாட்ராவின் அழகு ரகசியங்களில் குறிப்பிடத்தக்கது. ரோஜாப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயையும் கழுதைப்பாலையும் நீரில் கலந்து குளிப்பாராம். கழுதைப்பாலில் இருக்கிற லாக்டிக் அமிலமும் ரோஸ் ஆயிலும் தலைமுடி, சருமம் இரண்டுக்கும் நல்ல பொலிவைத் தரும். கழுதைப்பாலுக்குப் பதில் பாக்கெட் பாலை நாம் பயன்படுத்தலாம்.

உடலின் இறந்த செல்களை நீக்குவதற்குப் பொடித்த கடல் உப்பை ஆலிவ் ஆயிலுடன் கலந்து பயன்படுத்தியிருக்கிறார் கிளியோபாட்ரா. அதேபோல, கேசத்துக்குத் தேனும் விளக்கெண்ணெயும் கலந்து தடவியிருக்கிறார். தேனுடன் விளக்கெண்ணெய் சேரும்போது முடியின் கருமை நிறம் மாறாது. தேன், தலைமுடிக்கு நல்ல ஈரப்பதத்தைக் கொடுக்கும். விளக்கெண்ணெய் முடியை வலுவாக்கி, அறுந்துபோகாமல் செய்யும்.

பளிங்குச் சருமத்துக்கு வெண்ணெய்!

நெஃபர்டிடி மற்றுமோர் எகிப்திய அரசி. அரேபியக் காடுகளில் கிடைக்கிற ஷியா விதைகளில் இருந்து எடுக்கப்படுவதுதான் ஷியா வெண்ணெய். மாசு மருவே இல்லாத பளிங்குச் சருமத்துக்கு அரசி நெஃபர்டிடி, இந்த வெண்ணெயைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் இந்த வெண்ணெய் கிடைக்கும். கிடைக்காதவர்கள் பசு வெண்ணெய் வாங்கி உடல் முழுக்கத் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம்.

ரோஜா... ரோஜா மட்டுமே!

மொஹல் அரசி நூர்ஜஹான் தன்னுடைய சரும அழகுக்கு நம்பியது ரோஜாக்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயையும், ரோஜாப்பூக்கள் ஊறிய தண்ணீரையும்தான். குளிக்கும் தண்ணீரில் ரோஜா இதழ்கள், சருமத்தில் தடவி ஊறவைக்க ரோஜா ஆயில் என நீங்களும் முயற்சி செய்யலாம்!

பாதாம் தேன் லிச்சி!

சீன அரசி யங் யஹான் தன் முகத்தைப் பளிச்சென பராமரிப்பதற்கு, வெந்நீரில் கொஞ்சம் பாதாம் எண்ணெயும் தேனும் கலந்து கழுவி வந்திருக்கிறார். வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அடங்கிய லிச்சிப் பழங்களை அரைத்துத் தடவி, ஊறவைத்துக் குளித்ததுதான், அவருடைய பியூட்டி சீக்ரெட்.

வெயிலில்படாமல் ஒருநாள்!

தான் வாழ்ந்த காலத்தில் ‘உலகப் பேரழகி’ என்று கொண்டாடப்பட்ட ஹெலன் ஆஃப் ட்ராய், ஒரு கிரேக்க அரசி. ‘ட்ராஜன் போர்’ மூள்வதற்குக் காரணமே ஹெலனுடைய அழகுதான் என்கிறது வரலாறு. அப்படிப்பட்ட அழகி தன் அழகைப் பராமரிக்க நம்பியது, ஆலிவ் ஆயிலையும் தேனையும். மென்மையான சருமத்துக்கும் பளபளப்பான கூந்தலுக்கும் இந்த இரண்டையும் சமமாகக் கலந்து உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க வேண்டும். இந்த அழகு சிகிச்சை செய்துகொண்ட அன்றைய ஒருநாள் மட்டும் உடம்பில் வெயில்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். 

கொஞ்சம் பிராந்தியும் முட்டையின் மஞ்சள் கருவும்! 

ஆஸ்திரியாவின் எலிசபெத், அழகுக்காக அதிகம் மெனக்கெட்ட அரசிகளில் ஒருவர். தினமும் ஆலிவ் ஆயில் சேர்த்த வெந்நீர்க்குளியல், முகத்துக்கு வயலட் - வினிகர் ஸ்பிரே (புத்தம் புதிதாகப் பறித்த வயலட் பூக்களின் சாறு, ஆப்பிள் பழத்தில் எடுக்கப்பட்ட வினிகர், சுத்தமான தண்ணீர் சேர்க்கப்பட்ட கலவை), சுத்தமான தேன்விட்டு அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழ ஃபேஸ்பேக் என்று அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறார். மேலும், தேனடையில் இருந்து எடுக்கப்பட்ட மெழுகு, பாதாம் எண்ணெய், ரோஜாக்கள் ஊறவைத்த தண்ணீர், கோகோ வெண்ணெய் இவை நான்கையும் கலந்து கோல்டு க்ரீமாகப் பயன்படுத்தியிருக்கிறார் எலிசபெத். அவருக்கு முழங்கால் தொடுகிற அளவுக்கு இருந்த கூந்தலைப் பராமரிக்க, 15 நாள்களுக்கு ஒருமுறை `cognac’ என்ற பிராந்தியில் முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து தலையில் ஊறவைத்துக் குளித்திருக்கிறார்.

ரோஸ் ஆயிலும் அவகாடோவும்!

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மருமகளும் இளவரசியுமான டயானாவின் அழகு எல்லோரும் அறிந்தது. தினமும் இரண்டு முறை சி.டி.எம் (க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங்) செய்து கொள்வது இவருடைய வழக்கம். மற்றபடி, டயானாவைப் போலவே அவருடைய அழகு ரகசியமும் ரொம்ப சிம்பிளானது. ரோஸ் ஆயிலுடன் அவகாடோ பழத்தைக் கலந்து, ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இவருடைய வழக்கம். வாசனைக்கு ரோஜா அல்லது மல்லிகை சென்ட்தான் இவருடைய ஃபேவரைட்.

கற்களும் கண்கவரச் செய்யும்!

சீன அரசிகளில் ஒருவரான டவஜர் சிக்சி, ஜேடு கற்களால் செய்யப்பட்ட உருளையை வைத்துத் தினமும் முகத்தில் மசாஜ் செய்துகொள்வாராம். இது ரத்த ஓட்டத்தைத் தூண்டி, முகத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும். இந்த அழகு சிகிச்சையை இப்போது ‘கிரிஸ்டல் தெரபி’ என்ற பெயரில் பியூட்டி பார்லர்களில் செய்து வருகிறார்கள். முகத்தில் அரோமா எண்ணெய்களைத் தடவிவிட்டு, ஜேடு ரோலரை முகத்தின் மேலே உருட்டி மசாஜ் செய்
கிறார்கள். முகத்துக்கு நல்ல குளிர்ச்சியைத் தரவல்லது இந்த ஜேடு கற்கள். உங்கள் சருமத்துக்கு எந்தக் கல் பொருந்துகிறது என்பதை பியூட்டிஷியனிடன் கேட்டு தெரிந்துகொண்டு, அதைக்கொண்டு மசாஜ் செய்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.