Recent Posts
recent

பொது ஆரோக்கியம் சில குறிப்புகள்

இந்தத் தொகுப்பில் சில பொது ஆரோக்கியக் குறிப்புகள் உங்களுக்காக! 

பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. காரணமின்றி உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை தாராளமாக சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால் மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

பொது ஆரோக்கியம் சில குறிப்புக்கள்

ஏழு பாதாம் பருப்பு , 2 தேக்கரண்டி கசகசா இரண்டையும் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாம் பருப்பின் தோலை எடுத்துவிட்டு , கசகசாவுடன் பசும்பால் விட்டு நன்றாக அரைத்து சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பாலில் கலந்து காய்ச்சி வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் சோர்வு நீங்கும். உடல் நன்கு தேறும்.

முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கை, கால், உடல் அசதி நீங்கும். உடலில் பலமும் ஏறும்.

அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து வழுவழுப்பாக அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை சாப்பிடவும். நீண்ட நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் ஏறும்.

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும் சொரி சிறங்கை அகற்றும். அஜீரணத்தைப் போக்கும்.

காலையில் எலுமிச்சை பழச்சாற்றை உப்பு சேர்த்துக் கலந்து ஒரு மாதம் வரை வெறும் வயிற்றில் அருந்தினால், தேவையற்ற கொழுப்புச் சத்தும் குறையும், ரத்தமும் சுத்தப்படும்.

பச்சை வாழைத் தண்டை நறுக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

வெகு நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு( அதாவது வியாபாரம் செய்பவர்களுக்கு) நோய்கள் அணுகாமல் இருக்க வாரம் இரண்டு முறை பிரண்டைத் துவையலும், 15 நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்ப்பதுடன், விடியற்காலை ஒரு மையில் குறு நடைப் பயிற்சி செய்தல் வேண்டும். அப்படி இன்றி உட்கார்ந்த இடத்திலிருந்து வந்தால் உடல் அசைவின்றி முதலில் மூலச் சூடு, உண்டாகி, மூல  நோய்கள் உண்டாகி விடும்.

மயக்கம் சம்பந்தமான நோயிலிருந்து விடுபட, அதிமதுரம், சிறுதேக்கு ,பனங்கற்கண்டு, வகைக்கு 20 கிராம் சிதைத்து போட்டு  200 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க காய்ச்சி. 100 மில்லியாக சுண்ட வைத்த குடிநீரை தினமும் காலை உட்கொள்ள மயக்கம். உடல் சூடு, மயக்கமாகி கீழே விழுதல் ஆகியவை நீங்கும்.

வாழைத் தண்டு வெள்ளை முள்ளங்கி இவைகளைப் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு உப்பு சேர்த்து பச்சையாக வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர, அங்கங்கே விடும் சதை மடிப்புகள் மறையும். வாழைத்தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள உடல் பருமன் குறையும்.

நீங்கள் நெல்லிக்காயை கொட்டை நீக்கி வெயிலில் உலர வைத்து பதினைந்து நாட்கள் கழித்து உரலில் இட்டு இடித்து தூள் செய்து பாட்டிலில் போட்டு வைத்து, தினசரி காலை பல் துலக்கிய பின் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு மென்று விழுங்கி நீர் குடிக்கவும். ஆறு மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆஸ்துமா தொல்லை அறவே இருக்காது.

வறண்டு மெலிந்த தேகம் வளர்ச்சியடைய: பொன்னாங்கண்ணிக் கீரையை உலர்த்திப் பொடி செய்து, 400 கிராம் தூளுடன், 70 கிராம் கடுக்காய் தூள், 30 கிராம் ஏலக்காய்த்தூள், 400 கிராம் சீனா கற்கண்டு இவர்களை ஒன்று சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் மூன்று விரல் பிரமாணம் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் ஆகும். கண்ணொளி பிரகாசமடையும். உடல் பொன்னிறமாகும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி வெய்யிலில் உலர வைத்து 15 நாட்கள் கழித்து உரலில் இட்டு இடித்து தூள் செய்து பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் காலை பல் துலக்கிய பின் ஒரு ஸ்பூன் வாயிலிட்டு மென்று விழுங்கி நீர் குடிக்கவும். ஆறு மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆஸ்துமா தொல்லை அறவே இருக்காது.

5 பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய் 3, குங்குமப்பூ 5 இதழ் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர்,-சிறுமியர்,இளைஞர், தாய்மார்கள், நோயுற்றவர்கள், படுக்கையிலேயே கிடக்கும் நீண்டநாள் நோயாளிகள், என எல்லோருக்கும் கொடுக்கலாம். இது ஒரு சத்துள்ள நல்ல டானிக் ஆகும் இதை எல்லோரும் முயற்சி செய்து பார்க்கலாம்.

கொத்தமல்லியின் விதை தனியா எனப்படும். 100 கிராம் தனியா, 100 கிராம் தோல் சீவிய சுக்கு, 10 கிராம் ஏலக்காய் இம்மூன்றையும் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு தினசரி எடுத்து காபி டிகாஷன் போல் தயாரித்து, பால் தேன் கலந்து பருகிவர உடலின் உஷ்ண நிலை சீராக செயல்படும். ரத்த அழுத்தம் சமநிலையை இருக்கும். பசி உரிய நேரத்தில் எடுத்து உணவு செரிமானமாகும். பித்தம் தணியும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு பிடி பார்லி அரிசியை லேசாக வறுத்து, பொடி செய்து கால் லிட்டர் நீரில் போட்டு வேக வைக்கவும். வேகும் போது 50 கிராம் அத்திப்பழம், எனப்படும் உலர்ந்த திராட்சை பழம், அதிமதுரம் 25 கிராம், சுக்குப் பொடி ஒரு ஸ்பூன், நறுக்கிய 5 ஏலக்காய் இவைகளைப் போட்டு காய்ச்சி நன்றாக கரைந்ததும், இறக்கி ஆற வைத்து வடிகட்டி, பாலும், பனங்கற்கண்டும் சிறிது சேர்த்து பருக வேண்டும். உடலுக்கு வேண்டிய சக்தியை பெறலாம். சுவையாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக அருந்துதல் கூடாது.

செம்பருத்தி காபி:
 இரண்டு அல்லது மூன்று பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு, பின் அதில் நன்றாக கொதிக்கும் தண்ணீரை ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு எடுத்து வடிகட்டி நாள் முதல் தர டிகாஷன் கிடைக்கும். இத்துடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து பருகினால் ரத்த ரத்தம் புஷ்டி அடையும் .அதனால் ஆரோக்கியமும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.