Friday, April 18 2025

கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்

கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம் || Home remedies for dark circles around the neck

பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம்.

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.

தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும். இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும்.

ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.