Recent Posts
recent

இந்த கோடைகாலத்தில் உங்கள் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க!

இந்த கோடைகாலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் வெகுவாக குறைந்து விடுகிறது. இதனால் சருமம் வறண்டு போய், எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பொதுவாக இந்த வறண்ட சருமத்தை போக்க நாம் எல்லோரும் வெளிப்புற பராமரிப்பை மட்டும் செய்வோம். ஆனால் உண்மையில் வெளிப்புற பராமரிப்பு மட்டும் போதாது. உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க போதுமான உட்புற பராமரிப்பும் அவசியம்.

Summer Skin Care tips in Tamil

நீங்கள் உங்களுக்கு தேவையான உணவை எடுத்துக் கொள்ளும் போது உங்கள் உடலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. சில வகை உணவுகள் உங்கள் வறண்ட சருமத்தை போக்கி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே கோடைகாலத்தில் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வோம்.

வறண்ட சருமத்தை போக்க டிப்ஸ்கள்:

லோஷன்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை என்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும்.

உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்.

சருமத்திற்கு கடுமையான சோப்புக்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

10 நிமிடங்களுக்கு குறைவாக குளியுங்கள்.

வறண்ட சருமத்தை போக்க உதவும் உணவுகள்:

பால்:

உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிப்பதில் பால் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. 1 டம்ளர் பாலை காலை மற்றும் இரவு நேரங்களில் பருகி வாருங்கள். வறண்ட சருமம் இருக்கும் இடத்தில் பாலை அப்ளையும் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் காணப்படுகிறது. இது இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துயிர் அளிக்கிறது. பாலில் நிறைய கால்சியம் உள்ளன. இது உங்கள் வறண்ட சருமத்தை போக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. ஏனெனில் பொட்டாசியம் பற்றாக்குறை தான் உங்களுக்கு வறண்ட சருமத்தை ஏற்படுத்தும். இதிலுள்ள புரோட்டீன் வறண்ட சருமத்தால் பாதிப்படைந்த திசுக்களை சரி செய்ய உதவுகிறது.

அவகேடா:

அவகேடாவில் நிறைய சத்துக்கள் உள்ளன. 1 கப் அவகேடாவில் 4.8 மி. கி வைட்டமின் ஈ, 23 மி. கி வைட்டமின் சி, 336 ஐயு வைட்டமின் ஏ, 234 மி. கி ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் கே போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவகேடா பழத்தை அப்படியே சாப்பிட்டு வரலாம். அல்லது அதை சூப்பாக்கி 1 கப் என காலை வேளையில் குடித்து வாருங்கள். அவகேடாவில் உள்ள வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் லச்சின் வறண்ட சருமத்தை போக்க உதவுகிறது. இது சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கிறது. சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை குணப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்தியை தர உதவுகிறது. புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்லில் சருமத்தை குணப்படுத்தும் தன்மை காணப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் லிப்பிடு, வைட்டமின்கள் ஏ, பி, ஈ மினரல்களான ஜிங்க், காப்பர், பொட்டாசியம், மக்னீசியம், பி12, குளுக்கோமனான்ஸ், செலினியம், அமினோ அமிலங்கள் உள்ளன. எனவே 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டு வாருங்கள். கற்றாழை ஜெல் உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது. இது சருமத்தின் கொலாஜன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் மைக்ரோபியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ஆன்டி புரோட்டோசோவா பண்புகள் உள்ளன. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நேரடியாக 4 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை காலை வேளையில் குடித்து வாருங்கள். வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்து வாருங்கள். சூடான காபியில் தேங்காயெண்ணெய்யை சேர்த்து குடிக்கலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் இருப்பதால் உங்கள் வறண்ட சருமத்தை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, ஈ, லெக்டின், ஜிங்க், அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளன. வாழைப்பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம். ஓட்ஸ் மற்றும் சாலட்டில் வாழைப்பழத்தை சேர்க்கலாம். வாழைப்பழத்தை பேஸ் மாஸ்க்காகவும் நீங்கள் பயன்படுத்தலாம். வாழைப்பழம் வறண்ட சருமத்தை போக்கி சருமத்தை மாய்ஸ்சரைசர் ஆகவும், சருமம் நல்ல நிறத்துடன் ஜொலிக்கவும் உதவுகிறது. சரும கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. முகப்பருக்கள் மற்றும் சூரிய ஒளி பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

மீன்:

சால்மன், காட் போன்ற மீன் வகைகள் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், வைட்டமின்கள், மினரல்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்கி அழற்சியை குறைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஒரு வாரத்திற்கு 3 முறை மீன் உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.