Recent Posts
recent

மழைக்காலத்துல வர்ற சரும பிரச்சனைக்கு தீர்வு

மழைக்காலத்தில் வரக்கூடிய சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகள் என்னென்ன அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மழைக்காலத்தில் தண்ணீர், சேறு போன்றவற்றுக்கிடையே தொற்றுகள் எளிதாக பரவும் என்பது தெரியும். இது கூந்தலுக்கும் சருமத்துக்கும் என்ன மாதிரியான பிரச்சனைகளை உண்டு செய்யும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதற்கான குறிப்புகள்.

skin problems and prevention tips during rainy season

மழைக்காலத்தில் பொடுகு

மழைக்காலம் வந்தாலே பொடுகு பிரச்சனை பெரிதாக இருக்கும். சிலர் தலையை சொரிந்துகொண்டே இருப்பார்கள். மழைக்காலத்தில் தலைக்குளியலுக்கு பிறகு கூந்தல் காயாமல் இருக்கலாம். சிலர் தலைக்கு குளித்ததும் ஹேர் ட்ரையர் பயன்படுத்தாமல் இருக்கும் போது பொடுகு வரலாம்.

அதனால் ஒவ்வொரு முறை தலைக்குளியலுக்கு பிறகும் கூந்தலை நன்றாக உலர வைப்பதன் மூலம் கிருமித்தொற்று தாக்காமல் இருக்கலாம். ஈரத்தோடு பின்னலிடும் போது தொற்றுகள் எளிதில் தாக்கலாம்.

தலைக்குளியலின் போது ஷாம்புவுடன் ஆண்டி பொடுகு ஷாம்பு கால் டீஸ்பூன் கலந்து பயன்படுத்தினால் அரிப்பு குறையும்.

பொடுகு போக வெந்தயம்

வெந்தயம் பொடுகு போக்க உதவும். ஒரு நாள் முன்பே நான்கு அல்லது ஐந்து டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அதை நன்றாக அரைத்துகொள்ளவும். அதில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து கலந்து இதை உச்சந்தலையில் தடவி விட வேண்டும். முதலில் உச்சந்தலையில் எண்ணெய் தடவி பிறகு இந்த பேக்கை உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கலாம்.

மழைக்காலத்தில் நகச்சுத்தி

மழைக்காலங்களில் கைகளில் கால்களில் நகச்சுத்தி வரலாம். மருந்துகடையில் ஆன் டி பங்கல் க்ரீம் கிடைக்கும். அதை பயன்படுத்தினால் நகச்சுத்தி சரியாகும். ஒவ்வொரு முறை கை. கால்களை கழுவும் போது, பாத்திரங்கள் தேய்க்கும் போது கிளவுஸ் அணிந்து கொள்ளலாம். அல்லது ஈரமாக இல்லாமல் உடனே சுத்தமான துணியால் துடைத்து கொள்வதன் மூலம் நகச்சுத்தி குணப்படுத்தலாம்.

மழைக்காலத்தில் பித்த வெடிப்பு

கால்களில் பித்தவெடிப்பு சிலருக்கு இயல்பாகவே இருக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் படும் போது ஈரமாக இருக்கும் போது பித்தவெடிப்பு அதிகமாக இருக்கும். இதற்கு களிம்புகள் மருந்துகடைகளில் கிடைக்கும்.

குறிப்பாக பீட்டா ஹைட்ராக்ஸி ஆஸிட் என்று சொல்லக்கூடிய இவை இலைகளிலிருந்து எடுக்க கூடியவை. இது சேற்றுபுண், பித்தவெடிப்பை சரி செய்யும். இரவு படுக்கும் போது இதை தடவி மறுநாள் காலை சுத்தம் செய்யலாம்.

மழைக்காலத்தில் பூஞ்சை தொற்று

மழைக்காலத்தில் பாக்டீரியல் பூஞ்சை தொற்று சருமத்தை தாக்கும். துணிகள் ஈரமாக இருக்கும் போது அதை அணியும் போது சருமத்தில் பூஞ்சை தொற்று வரும். இதனால் தேமல் பொன்று இருக்கும். இதை தடுக்க துணியை ட்ரையரில் போட்டு, அயர்ன் செய்து பயன்படுத்தலாம். இதனால் தொற்றுக்கள் வராமல் தடுக்கலாம்.

மழைக்காலத்தில் துணிகளை அணிவதற்கு முன்பு டஸ்டிங் பவுடர் பயன்படுத்தினால் சருமத்தில் அரிப்பு இல்லாமல் தடுக்கலாம்.

மழைக்காலத்தில் சருமப்பராமரிப்பு

மழைக்காலத்தில் சருமம் மந்தமாக இருக்கும். பிரைட் கொடுக்க ஆரஞ்சு தோல் பொடி சிறந்த பலனை கொடுக்கும்.

ஆரஞ்சு தோல் பொடி அரை டீஸ்பூன் எடுத்து தயிரில் சேர்த்து அதனுடன் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகம், கழுத்து பகுதியில் தடவி விடலாம். கைகளிலும் பயன்படுத்தலாம். பிறகு 15 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கும் வெளியேறும்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.