Thursday, April 24 2025

முடி உதிர்தலுக்கு எளிய தீர்வு!!!

முடி உதிர்தலுக்கு ரஷ்ய நாட்டின் ஒரு வீட்டு மருந்து மூலம் எளிய தீர்வு!!!
                  
ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது. முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது.

தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.

தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம். ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்னை இருக்கும். தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண் ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது. 
முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப்போதும் வறட்சியாக காணப் படும். நுனிப்பகுதி வெடிக்கும். இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம்பிக்கும்.

இதறக்கு ரஷ்யர்கள் உபயோகிக்கும் ஒரு சுலபமான பயனுள்ள மருந்து இதுதான்.
  •  தலையை வழக்கம் போல கழுவி, ஒரு டவலால் நன்றாக தேய்த்து உலர்த்த வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நன்றாக டவலால் தலையை தேய்க்கவும்.
  • பின்பு சமையல் உப்பை முடிகளின் வேரில் படுமாறு தலையில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதற்க்கு பிறகு தலையை கழுவிக் கொள்ளவும்.
  •  இந்த முறையை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து இரண்டு மாதங்களுக்கு தவறாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • இவ்வாறு செய்யும்போது முடி முன்பை விட அடர்த்தியாகவும், முடி உதிர்ந்த இடங்களில் புதிதாக முடிகள் முளைப்பதையும் காணலாம்.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.