பருக்கள் வராமல் தடுக்க எளிய இயற்கை சிகிச்சை!!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்துவிடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சருமபிரச்னைகளில் ஒன்று தான் இந்தமுகப்பரு. உடல் சூட்டினால் பருக்கள் ஏற்படுவதாகவும், எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. சிலருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பருக்கள் மறைந்துவிடுகிறது. சிலருக்கோ முகத்தின் அழகை சீர் குலைப்பதுபோல் குழிகள் உண்டாகி அவலட்சணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இருப்பினும், ஒருசில இயற்கைப்பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்கமுடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.
ஆவிப்பிடித்தல்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில்ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால்,பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்தசெல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்
கிராம்பு: கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும்.அதற்கு கிராம்பை நீரில்போட்டு கொதிக்கவிட்டு,குளிரவைத்து,பின் அதனை அரைத்து,பருக்கள் உள்ள இடங்களில் தடவி,15அல்லது 20 நிமிடம் ஊறவைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவவும்: அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.
சந்தனப்பொடி: சந்தனப்பொடியுடன், தயிர், கடலைமாவை மற்றும் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊறவைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.
தேன்: தேனைக்கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 1520நிமிடம் ஊறவைத்து, பால்கொண்டு முதலில் கழுவி, பின்நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம். யாரையும் எளிதில் எதிர்கொண்டு பேசுவதற்கு கூட கூச்சத்தை ஏற்படுத்தும். இந்த பருக்களை மேற்கூறப்பட்டுள்ள செலவு குறைந்த மருத்துவ குறிப்புக்களை கையாண்டு பருக்கள் இல்லாத முகத்தை நாமும் கொண்டு வருவோம்

கருத்துகள் இல்லை: