Recent Posts
recent

கைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை

சரும அழகை பராமரிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் இளம் வயதிலேயே சிலருடைய கைகள் வயதான தோற்றத்தை போல காட்சி அளிக்க தொடங்கிவிடும்.

கைகளின் பொலிவுக்கு செய்ய வேண்டியவை..

சரும அழகை பராமரிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் இளம் வயதிலேயே சிலருடைய கைகள் வயதான தோற்றத்தை போல காட்சி அளிக்க தொடங்கிவிடும். அதற்கு ஒருசில பழக்க வழக்கங்களும் காரணம். சாப்பிடுவதற்கு முன்பும், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் கைகளை கழுவுவது அவசியமானது.

சிலர் கை களை கழுவுவதற்கு துணிகளுக்கு சலவை செய்யும் சோப்பை பயன்படுத்துவார்கள். அவரவர் சருமத்திற்கு பொருத்தமான வீரியம் குறைந்த குளியல் சோப்பை பயன்படுத்த வேண்டும். சருமத்தை போலவே கைகளும் ஈரப்பதம் கொண்டிருக்க வேண்டும். கைகளின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுவது ஈரப்பதத்தை தக்க வைக்கும். அதே வேளையில் கைகளை கழுவியதும் நன்றாக உலர்த்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வருவது கைகளை மென்மையாக்குவதோடு வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்கும்.

வெளியில் செல்லும்போது கைகளில் சன் ஸ்கிரீன் பூசிக்கொள்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அது சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதோடு இளமைப்பொலிவையும் தக்க வைக்க உதவும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கைகளில் எண்ணெய் தடவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அது சருமத்தில் ஊடுருவி, உலர்வடையாமல் பார்த்துக்கொள்ளும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை அதற்கு ஏற்றது.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.