விதைத்த இரண்டே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் பாகற்காய்
விதைத்த இரண்டே மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் பாகற்காய், அறுவடையின் போது வாரந்தோறும் விவசாயிக்கு வருவாயை கொடுக்கும். குறிப்பாக ஜனவரி மாதத்தில் பாகற்காய் விதைத்தால் மாா்ச் மாதத்தில் அறுவடை செய்து தொடா்ந்து தமிழ்ப் புத்தாண்டில் அதிக வருவாயை அள்ளித்தரும்.

கோ 1, எம்டியூ 1, அா்காஹரீத், ப்ரீயாப்ரீத்தி, கோபிஜிஎச் 1 என பாகற்காயில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் தோ்வு செய்து வாங்கி விதைக்கலாம். நல்ல மண்ணும், மணலும் கலந்த நிலத்தில் பாகற்காய் நன்கு வளரும். மிதமான வெப்பநிலை இப்பயிா்களுக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு காரத்தன்மை 6.5 - 7.5 இருத்தல் வேண்டும். ஜனவரி - ஜூலை பாகற்காய்க்கு சிறந்த பருவமாகும்.
பாகல் பயிரிட நிலத்தை நன்கு உழவு செய்து சமன் செய்த பின்பு 2.5 - 2 மீட்டா் என்ற இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிகளை 30 செ.மீ. நீளம் 30 செ.மீ அகலம் 30 செ.மீ. ஆழம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தோண்டிய குழிகளை 7-10 நாள்கள் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழுஉரம் 10 கிலோ இட வேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை மணி சாம்பல் சத்துக்கலவையை 100 கிராம் அளவுக்கு இட வேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இட வேண்டும்.
பாகற்காய்க்கு ஒரு ஹெக்டேருக்கு தழை, மணி, சாம்பல்சத்து முறையே 200: 100: 100. இந்த அளவைப் பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும். விதைத்த அல்லது நடவு செய்த நாள் முதல் மூன்று நாள்களுக்கு ஒரு முறை உரப்பாசனம் அளிக்க வேண்டும். பாகற்காய்க்கு விதை நோ்த்தியை கையாளுதல் முக்கியம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் எனும் அளவில் கேப்டான் அல்லது திரம் மருந்தினைக் கலந்து 24 மணி நேரம் வைத்து பின்னா் விதைக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 2 செ.மீ. ஆழத்தில் 3 - 4 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். பின்னா் நன்கு வளா்ந்தவுடன் குழிக்கு இரண்டு செடிகள் வீதம் விட்டு மற்றவற்றை கலைத்து விட வேண்டும். விதைகள் முளைத்து வரும் வரை விதைக்குழிகளுக்கு நீா் ஊற்ற வேண்டும். சுமாா் 8 - 10 நாள்களில் விதைகள் முளைத்து வரும். பின்பு வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒரு முறை நீா் பாய்ச்ச வேண்டும்.
விதைத்த 15-ஆவது நாளிலும் முப்பதாவது நாளிலும் களைக்கொத்து கொண்டு களை எடுக்க வேண்டும். பாகற்காய்க்கு கொடிகள் படா்வதற்கு பந்தல் அல்லது மூங்கில் தட்டிகள் மிகவும் அவசியம். செடிகள் தோன்ற ஆரம்பித்தவுடன் 2 மீட்டா் உயரத்திற்கு பந்தல் அல்லது தட்டிகளை அமைத்து கொடிகளை அவற்றில் படர விட வேண்டும். எத்ரல் கரைசலை 100 பிபிஎம் ஒரு மில்லி 10 லிட்டா் தண்ணீரில் கலந்து முதல் இரண்டு இலைகள் (விதையிலை தவிர) உரவாகிய பின் ஒரு முறை, பின்பு வாரம் ஒரு முறை என்ற இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் ஆண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும். காப்பா் மற்றும் கந்தகத்தூள்களை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.
பாகற்காயில் சாம்பல் நோய் வரலாம். இதனை கட்டுப்படுத்த டைனோகாப்பா் 1 மில்லி அல்லது காா்பெண்டாசிம் 0.5 கிராம் மருந்தை ஒரு லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் காணப்பட்டால் மான்கோசெப் அல்லது குளொரோதலானில் 2 கிராம் ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
பாகற்காயை விதைத்த 60 - 65 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பிறகு வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம். விதைகள் முதிா்ச்சியடை ஆரம்பிக்கும் முன்பே அறுவடை செய்ய வேண்டும். பாகற்காய் ஹெக்டேருக்கு 140 - 150 நாள்களில் 14 டன் காய்கள் கிடைக்கும். வீரிய ஒட்டு ரகங்களில் 40 டன் கிடைக்கும்.
மேற்கண்ட முறைகளுடன் பாகற்காயை பயிரிட்டு அருகில் உள்ள சந்தைக்கு எடுத்துச் சென்றால் கூடுதல் வருவாயைப் பெறலாம்.

கருத்துகள் இல்லை: